சோழர்களின் பெருமைகளை உலக அரங்கில் பறைசாற்றுவேன் MP.சுதா மக்களவையில் வலியுறுத்தல் 

சோழர்களின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களாக விளங்கிய பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி கடற்கரைகளில்; கடல்சார் அகழ்வாராய்ச்சி செய்ய சிறப்புத் திட்டம், சிறப்புக்குழு மற்றும் சிறப்பு நிதியை அறிவிக்க வேண்டும் சோழர்களின் பெருமைகளை உலக அரங்கில் பறைசாற்றுவேன் என பிரதமர் நரேந்திரமோடி கங்கைகொண்டசோழபுரத்தில் பேசியிருந்த நிலையில், மயிலாடுதுறை எம்.பி. சுதா மக்களவையில் வலியுறுத்தல்

பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜூலை 27-ஆம் தேதி கங்கைகொண்டசோழபுரம் வந்திருந்தபோது, சோழர்களின் பெருமைகளை குறிப்பாக ராஜேந்திரசோழனின் பெருமைகளை உலக அரங்கில் பறைசாற்றுவேன் என பேசியிருந்தார். இந்நிலையில், மக்களவையில் நேற்று பேசிய மயிலாடுதுறை எம்.பி. சுதா கூறுகையில், உலகை ஆண்ட சோழர்களிடம் சக்திவாய்ந்த கடற்படை இருந்தது.

சோழர்களின் கப்பல்கள் 1,000 யானைகளுக்கு மேல் சுமந்து சென்றன. இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானவற்றை சோழர்கள் கைப்பற்றினர். அவர்கள் தங்கள் கடற்படைப் பயணங்களைத் தொடங்கிய இரண்டு துறைமுகங்கள் பூம்புகார் மற்றும் செம்பனார்கோயில் (தரங்கம்பாடி) துறைமுகங்கள் ஆகும். இந்த இரண்டு துறைமுகங்களும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ளன.

ஜூலை 27-ஆம் தேதி கங்கைகொண்டசோழபுரத்தில் மகா சோழர்களைப் பாராட்டிய பிரதமர், சோழர்களின் புகழைப் பரப்ப இந்த அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என்று அறிவித்தார். பூம்புகார் மற்றும் செம்பனார்கோயில் (தரங்கம்பாடி) கடற்கரை சோழ மரபு பற்றிய தகவல்களின் புதையலாக இருப்பதால், அவற்றைக் கடலோர அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

சோழரின் மரபு இந்தியாவின் மரபும் கூட. கீழடி அளவில் கடல்சார் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டால், இந்தியாவின் கடற்படை வலிமை உலகிற்குத் தெரியும். சோழர்களின் துறைமுகங்களாக விளங்கிய பூம்புகார் மற்றும் செம்பனார்கோயில் கடற்கரையில் கடல்சார் அகழ்வாராய்ச்சி செய்ய ஒரு சிறப்புத் திட்டம், சிறப்புக் குழு மற்றும் சிறப்பு நிதியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என அவர் பேசினார்.

Exit mobile version