சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பாக தமிழ்நாடு தலை குனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தலைமையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சிறப்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
யார் யாரோடு சேர்ந்தாலும் யார் யாரோடு சேராமல் இருந்தாலும் இரண்டாவது இடம் யாருக்கு என்பது தான் தமிழகத்தில் போட்டியே தவிர முதலிடத்தில் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகம் இருக்கும். வெற்றிக்கனியை பறிக்கும் அதற்கான நிலை மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் தெரிகிறது
எஸ் .ஐ .ஆர் ஐ பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து என்னென்ன குளறுபடிகள் இருந்தது என்பது குறித்து நாம் அறிந்தது தான். பல மாவட்டங்கள் மற்றும் தொகுதிகள் எஸ்ஏஆர் பணியில் ஒரு சில படிவங்களை கொடுத்தால் தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. எஸ் ஐ ஆர் குளர்ப்படி குறித்து ஆரம்பத்தில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் உச்சநீதிமன்றம் 10 நாட்கள் கழித்து தான் இறுதிப்பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எந்த சூழ்நிலையில் ஒன்றிய அரசு சதி செய்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும் என்பது திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய நோக்கம் தமிழக முதல்வர் தேர்தல் வியூகம் வகுப்பார் வெற்றிக் கனியை பறிப்பார் எதிரணியின் சதி இதில் எடுபடாது என தெரிவித்தார்.















