சித்தர்காடு டாஸ்மார்க் மதுபான கடை சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவர் கைது

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு டாஸ்மார்க் மதுபான கடை அருகே சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் டாஸ்மார்க் மதுபான கூட்டத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறை டிஎஸ்பி சுந்தரேசன் மதுக்கடத்தல், சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் மாவட்ட காவல்துறை வளைந்து நெளிந்து போக சொல்வதாக குற்றம் சாட்டியும் காவல்துறை மேல்மட்ட உயர் அதிகாரிகள் நெருக்கடி அளித்து தன்னை பழி வாங்குவதாகவும் டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சுந்தரேசன் கடந்த 20ஆம்ஆம் தேதி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை ஓரம் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சட்டத்திற்கு புறம்பாக பொது வெளியில் அட்டைப்பெட்டியில் வைத்துக் கொண்டு டாஸ்மார்க் சரக்கு விற்பனை தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜிபே வசதியுடன் நடைபெற்று வரும் மது விற்பனை குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக மூவலூரைச் சேர்ந்த செல்வம் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன் தொடர்சியாக அந்த டாஸ்மாக் பாரானது நேற்று 23/07/2025 பகல் 2 மணியளவில் நாகப்பட்டினம் டாஸ்மாக் மண்டல மேலாளர் பழனிவேல் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி முன்னிலையில் நிரந்தரமாக பூட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version