மயிலாடுதுறை மாவட்டத்தில்
தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி அனைவரும் சாலையில் கவனமுடனும் பாதுகாப்புடனும் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தலைக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறை சார்பாக கடந்த மாதம் தலைக்கவசம் அணியாத 900 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் நின்ற மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மணியரசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசண்முகம், தலைமை காவலர் கலையரசன் ஆகியோர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஹெல்மெட் அணியாமல் வந்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தனர்.