கன்னியாகுமரி சின்னமூட்டம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து இரும்பு படகு கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. மீறி சென்றால் 48 மணி நேரத்தில் படகை பறிமுதல் செய்வோம் என்று தெரிவித்ததால் படகின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் சின்ன முட்டம் துறைமுகத்தில் தனது குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350 விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இந்த நிலையில் இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகு சேதமடைந்ததை தொடர்ந்து அந்த படகை அதன் உரிமையாளர் ஸ்டீல் படகாக மாற்றம் செய்து துறைமுகத்திற்கு கொண்டு வந்த நிலையில் அதனை அங்கு நிறுத்த மீன்வளத்துறை அனுமதி மறுத்துள்ளது.

மேலும் அந்த படகு மீன்பிடிக்கச் செல்லவும் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது 70 லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்டீல் படகு வடிவமைத்து மீன்பிடித் தொழில் செய்ய வந்துள்ள நிலையில் அதற்கு அனுமதி மறுப்பது ஏன் என்பது தெரியவில்லை என்றும் ஏற்கனவே ஸ்டீல் படகு ஒன்று அங்கு தங்கியிருந்து தொழில் செய்து வரும் நிலையில் தங்கள் படகுக்கு மட்டும் அனுமதி மறுப்பது புரியாத புதிராக உள்ளது என்று கூறி அந்த படகை நம்பி தொழில் செய்யும் 27 குடும்பத்தினர் இன்று சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் 48 மணி நேரத்தில் இரும்பு விசைப்படகை துறைமுகத்தை விட்டு வெளியே கொண்டு செல்லவில்லை என்றால் படகை பறிமுதல் செய்வோம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பரபரப்பு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களது ஸ்டீல் விசைப்படகை கடலுக்குள் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.