கடந்த 2தினங்களாக பெய்த மழையின் காரணமாக சுதாகர் என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து சேதம்

கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையின் காரணமாக தரங்கம்பாடி அருகே சுதாகர் என்பவரது கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி தரங்கம்பாடி ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் சுதாகர் வித்யா என்பவர்கள் அது கூரை வீடு கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக வீட்டின் பின்புற சுவர்கள் இடிந்து விழுந்து சேதமடைந்தது அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர் இந்நிலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த தகவல் அறிந்த பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார் மேலும் வீடு கட்டிக் கொடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Exit mobile version