ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் காவேரி சங்கமத்தில் பலிகர்ம பூஜைகள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் காவேரி சங்கமத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து வழிபாடு.

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை,இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவேரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவேரி சங்கமத்தில் என்றழைக்கப்படும் சங்கமுக தீர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பச்சரிசி,கீரை வகைகள், காய்கறிகள்,எள் உள்ளிட்ட பொருட்களை வைத்து பலிகர்ம பூஜைகளை செய்து தர்பணம் கொடுத்து வழிபட்டர்.இதில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

Exit mobile version