மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்முறையாக பறக்க விடப்பட்ட பிரம்மாண்ட தேசியக்கொடி:- ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சிறப்பாக விழா நடத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை :-
நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறை 38-வது மாவட்டமாக பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் வாயிலில் இந்திய தேசிய கொடியுடன் கூடிய கம்பம் அமைத்து தரவேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தற்போது ரயில் நிலையத்தில் நடைபெற்ற வரும் அமிர்த் பாரத் திட்ட விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக, தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இன்றும் முதல் தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டமாக பிரிக்கப்பட்டு ரயில் நிலையத்தில் முதல் முறையாக தற்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வருகின்ற சுதந்திர தினத்தன்று சுதந்திர தின விழா சிறப்பாக நடத்த வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.