மயிலாடுதுறை அருகே அக்களூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா; பால் காவடி பன்னீர் காவடி எடுத்து வந்த சிறுவர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்தியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே அக்களூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனங்கலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலில் 90 வது ஆண்டு பால்குடம் காவடி திருவிழா இன்று நடைபெறுகிறது. விழாவையொட்டி ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், வாயில் 16 நீள அலகு குத்தியும், சிறுவர்கள் பால் காவடி, பன்னீர் காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு ஸ்ரீ அனங்கலிங்கேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பாலகுட காவடி திருவிழாவில் பால் காவடி பன்னீர் காவடி எடுத்து வந்த சிறுவர்கள் அருள் வந்து ஆடியது அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்தியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் அமுது படையலும், மாலை சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற உள்ளது.