ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் இருமுறை சவரனுக்கு 640 ரூபாய் வரை உயர்ந்து, 93 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையும் இன்று ஒரேநாளில் கிலோ 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை தினசரி 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று காலையில், சவரனுக்கு 200 ரூபாயும், மாலையில் 440 ரூபாயும் என, ஒரேநாளில் 640 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 580 ரூபாயாகவும், ஒரு சவரன் 92 ஆயிரத்து 640 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலை இன்று ஒரேநாளில் கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 197 ரூபாயாகவும்,
ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.