மாதம் 1000 ரூபாய், அடுத்த கட்ட செயலில் இறங்கிய அரசு, எப்படி பெறுவது?

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட திட்டமாக, கடந்த 2023 செப்டம்பரில் திமுக அரசு “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இந்த தொகை வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கும் நடவடிக்கையாக, வரும் ஜூன் 4 முதல் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் “மக்களுடன் முதல்வர்” எனும் பெயரில் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில்,

மீண்டும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, இந்த முறையில் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படாது என்பதையும் அரசு விளக்கியுள்ளது.

முகாம் நடைபெறும் இடம் தொடர்பாக, உங்கள் ஊரின் தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய தகவல்கள்:

விண்ணப்பத்தில் பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும்:

முக்கியமாக:

விண்ணப்பம் ஏற்கப்பட்டால், வங்கி பாஸ்புக்கில் உள்ள மொபைல் எண்ணுக்கு தகவல் மெசேஜ் வரும். நிராகரிக்கப்பட்டாலும் தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், தவறான மொபைல் எண் அல்லது வங்கி கணக்கு எண் வழங்கினால், மீண்டும் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மக்கள் கவனிக்க வேண்டியது:
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் திட்டத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version