பிளாட்டினத்தை விட விலை மதிப்பான உலோகம் எது தெரியுமா?

சென்னை,: பலரும் தங்கம் உலகிலேயே மிக விலை உயர்ந்த உலோகமாக நினைக்கிறார்கள். சிலர் பிளாட்டினமே அதைவிட விலையுடையது எனக் கருதலாம். ஆனால் உண்மையில், இந்த இரண்டையும் மிஞ்சி, ரோடியம் என்ற உலோகம் தான் 2025ம் ஆண்டின் உலகின் விலை உயர்ந்த உலோகமாக திகழ்கிறது.

ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) ரோடியத்தின் தற்போதைய விலை $4,500, இந்திய மதிப்பில் சுமார் ₹3.75 லட்சமாகும்.

முக்கிய உலோகங்களின் தற்போதைய விலை (ஒரு அவுன்ஸ்):

ஏன் ரோடியத்தின் விலை இவ்வளவு அதிகம்?

ரோடியம் ஒரு பளபளப்பான வெள்ளி நிற உலோகம். இது கார்களின் எக்ஸாஸ்ட் சிஸ்டம்களில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக, நைட்ரஜன் ஆக்சைடை சுத்தமான நைட்ரஜன் மற்றும் நீராவியாக மாற்ற உதவுவதால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இது மிகவும் அரிதாக கிடைக்கும் உலோகம். உலகளவில் ரோடியத்தின் சுமார் 80% தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கிறது. சிறிய அளவில் ரஷ்யா, கனடா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.

மேலும், இந்த உலோகம் தங்கத்தைவிட 100 மடங்கு விலை உயர்ந்தது, என்பதாலும் தொடர்ந்து விலை உயர்வை சந்திக்கிறது.

நகைத் துறையிலும் முக்கிய பங்கு

ரோடியம் நகைகளின் மேற்பரப்பில் ‘ரோடியம் ப்ளேட்டிங்’ செய்து பளபளப்பை அதிகரிக்க பயன்படுகிறது. இது தேய்தல், கலங்கல், நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் நீடித்து பயன்படுத்தப்படும் தன்மையைக் கொண்டது. பழைய நகைகளையும் புது போன்ற தோற்றத்தில் கொண்டு வர ரோடியம் ப்ளேட்டிங் பயன்படுகிறது.

ரோடியம் 1803ஆம் ஆண்டு வில்லியம் ஹைட் வொலாஸ்டன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் வெள்ளி போன்ற ஒளிரும் தோற்றத்தால் ‘வெள்ளைத் தங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

Exit mobile version