விநாயகர் சிலை கரைப்புக்கு ஏன் கட்டணம் வசூலிக்கவில்லை?

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணங்கள் வசூலிக்காது ஏன் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் கழிவுகள் அப்புறப்படுத்தாதது குறித்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் பிரகாஷ் கர்காவா அடங்கி அமர்வு, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்துள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி தவறிவிட்டதாக அதிருப்தி தெரிவித்தது.

Exit mobile version