ஜனாதிபதி, பிரதமருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு ஏன்..?

பாகிஸ்தான் மீது நடத்திய ராணுவ நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் எந்த நாடும் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இது ஒருபுறம் இருக்க, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில முக்கிய அலுவல்களில் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

உளவுத்துறை தகவல் அடிப்படையில் அடுத்த சில நாட்கள் பயணம் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version