“ஆளுநருக்கு தமிழர்களின் மீது வெறுப்பு ஏன் ?” – கனிமொழி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார்.

சுதந்திர தின உரையில், “2024ஆம் ஆண்டில் மாநிலத்தில் போக்ஸோ வழக்குகள் 56 சதவீதம் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. இதனால் பெண்கள் வீடுகளை விட்டு வெளிவர அச்சப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

இதை எதிர்த்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி,

“தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல்மூன்று இடங்களில் உள்ளவை உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் — மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள்.

பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட இல்லாத தமிழ்நாட்டை குற்றம்சாட்டும் ஆளுநருக்கு, தமிழர்களின் மீது என்ன வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா அல்லது பாஜக தலைவராகவா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version