சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி ? – சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி

சேலம்: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாமக யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்பது குறித்து கட்சித் தலைவர் அன்புமணி பேசியுள்ளார்.

தமிழக அரசியல் கட்சிகள் தற்போது மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன. அதேசமயம், கூட்டணி விவகாரத்திலும் கட்சிகள் தீவிரமாக இயங்குகின்றன.

திமுக கூட்டணி தொடரும் எனக் கூறப்படுகிறது. அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்திருந்தாலும், 2026 தேர்தலுக்காக மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், பாமகவின் நிலைப்பாடு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாமக யாரின் தலைமையில், யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி நிலவுகிறது.

இதுகுறித்து சேலத்தில் நடைபெற்ற பாமக நிகழ்ச்சியில் அன்புமணி,
“இன்னும் நான்கு மாதம் தான், பொறுத்துக்கங்க. அப்புறம் நம்ம ஆட்சிதான். நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்,” என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைத்தது தன் விருப்பமல்ல என்று ராமதாஸ் முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததும் நினைவுகூரத்தக்கது

Exit mobile version