3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி

மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனை, டிஜிபி நியமனம், நெல் கொள்முதல் தாமதம் உள்ளிட்ட பல விவகாரங்களில் அரசு செயலிழந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

டிஜிபி நியமனத்தை அரசு நோக்கத்துடன் தாமதப்படுத்துகிறது என்றும், விவசாயிகள் 15 நாட்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என குற்றம் சொல்வதை அவர் நினைவுபடுத்தினார். மழையில் நெல் சேதமடைந்தபோதும், முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடவில்லை என்று விமர்சித்தார். மேலும், மூன்று வேளாண் சட்டங்கள் தமிழ்நாடு விவசாயிகளை பாதிக்காது என்றும், வட மாநிலங்களுக்கே அதின் தாக்கம் இருக்கும் என்றும் விளக்கினார்.

22% ஈரப்பத நெல் கொள்முதல் கோரிக்கையை மத்திய அரசு ஏன் நிராகரித்தது என்பதை மாநில அரசு கேட்காமல் இருக்கிறது; போராடுவது எதிர்க்கட்சிதான் என்று அவர் குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR) நடைபெற திமுக எதிர்ப்பது சந்தேகத்திற்குரியது என்றும், உண்மையான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

Exit mobile version