இரவில் தூக்கம் குறைந்தால் உடலில் என்ன நடக்கும் ? புதிய ஆய்வு எச்சரிக்கை !

நவீன வாழ்க்கை முறையில் தூக்க நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பலர் தினமும் ஐந்து அல்லது ஆறு மணி நேரமே தூங்குவதை சாதாரணமானதாகவே கருதி வருகின்றனர். இதன் விளைவாக, கருவளையம், தலைவலி, மனஅழுத்தம் போன்றவை அதிகரித்து, வாழ்க்கை தரமே பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான பல ஆய்வுகள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது உடலின் முக்கிய செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது என்பதை உறுதி செய்கின்றன. மூளை செயல்பாடு, இதய நலம், நோய் எதிர்ப்புத் திறன் போன்றவை தூக்கக்குறைவால் மிகுந்த அளவில் பாதிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

7 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினால் என்ன நடக்கும்?

அக்டோபர் 29-ஆம் தேதி Nature Neuroscience என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆய்வில் முக்கியமான தகவல் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பெரியவர் தினமும் 7–9 மணி நேரம் தூங்க வேண்டும்.

இதைவிட குறைவாக தூங்குகிறவர்களுக்கு, விழித்திருக்கும் நேரத்திலேயே மூளை cerebrospinal fluid (CSF) திரவத்தை வெளியே தள்ளத் தொடங்குகிறது.

இந்த செயல்முறை சாதாரணமாக நாம் தூங்கும் நேரத்தில் மட்டுமே நடக்க வேண்டும். ஆனால் தூக்கம் சரியாக கிடைக்காதபோது, இந்த செயல்பாடு பகலில் நடப்பதால், மூளை தற்காலிகமாக “Zone Out” ஆகி விடுகிறது, இதுவே திடீர் சோர்வு, கவனம் குறைவு, மன குழப்பம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

மேலும், ஆய்வு தெரிவிப்பதாவது:

CSF ஓட்டத்தில் ஏற்படும் இந்த மாற்றம் கண்களின் கருவிழி (pupil) அளவிலும் தாக்கம் செலுத்துகிறது. கண்கள் நீண்ட நேரம் செயல்பட வேண்டிய நிலை ஏற்படுவதால், கருவிழி அளவு மாறி, கண் சோர்வு மற்றும் கருவளையம் அதிகரிக்கும்.

மூளை ஆரோக்கியத்திற்கும் உடல் சமநிலைக்கும் தூக்கம் அவசியம்

ஆய்வாளர்கள் வலியுறுத்துவதாவது :
தூக்கம் என்பது உடல் ஓய்வு எடுப்பதற்காக மட்டுமல்ல, மூளை தன்னைக் கழுவிக் கொள்ளும் மிக முக்கியமான செயல்பாடு. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் குறைந்தது 7 மணி நேரம் — சிறந்த நிலையில் 7–9 மணி நேரம் — தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

Exit mobile version