சாதகமான உறவை விரும்புகிறோம் : அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா–இந்தியா உறவுகள் குறித்து டிரம்ப் தெரிவித்திருந்தது: “பிரதமர் மோடி எப்போதும் எனக்கு நண்பர். மோடி ஒரு சிறந்த பிரதமர். இந்தியா–அமெரிக்கா உறவுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை” என அவர் பாராட்டினார்.

இந்தக் கருத்துக்கு பதிலளித்த பிரதமர் மோடி, “அதிபர் டிரம்பின் கருத்தை நான் வரவேற்கிறேன். இந்தியா தொடர்பான சாதகமான மனநிலையை வெளிப்படுத்தியதற்காக அவரை பாராட்டுகிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுள்ள மனநிலையைப் போலவே, இந்தியாவும் அமெரிக்காவுடன் சாதகமான உறவை விரும்புகிறது” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version