மதுரை: “அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற வகையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது” என்று கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தேஜ கூட்டணியில் இருந்து முக்கிய தலைவர்கள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென பலர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த திருமாவளவன், “இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் அதிமுக ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றனர். அவர் இன்று மனம் திறந்து பேசுவதாகக் கூறியிருந்தாலும், முழுமையாக வெளிப்படையாக கூறவில்லை என்பது பேட்டியில் இருந்து தெரிகிறது. யார் யாரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதையும் அவர் வெளிப்படையாகச் சொல்லலாம். இருந்தாலும் இது அவர்களின் உட்கட்சி விவகாரம் தான்” என கூறினார்.
மேலும் அவர், “அதிமுகவை ஒரு திராவிட இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைக்கட்சி பெரிதும் மதிக்கிறது” என்றும் வலியுறுத்தினார்.