குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து நாளை (டிசம்பர் 10, 2025) முதல் அடுத்த 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2863.86 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசனம் பெறும்.  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, குதிரையாறு அணையில் நீர் திறப்பு குறித்த விவரங்கள்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமத்தில் உள்ள குதிரையாறு அணை. 10.12.2025 முதல் 08.04.2026 வரை 120 நாட்களுக்கு. அணையிலிருந்து இடது பிரதானக் கால்வாய், பழைய பாசனப் பரப்பு மற்றும் 5 அணைக்கட்டு பாசனப் பரப்பு மற்றும் நேரடி பாசனப் பரப்பிற்காகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இடது பிரதானக் கால்வாய்: 103.68 மில்லியன் கன அடிக்கு மிகாமல். மொத்த அணைக்கட்டு பாசனப் பரப்பு மற்றும் நேரடி பாசனப்பரப்பு: 165.89 மில்லியன் கன அடிக்கு மிகாமல். மொத்த திறப்பு (நீரிழப்பு உட்பட): 296.53 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. குதிரையாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால், மொத்தம் 2863.86 ஏக்கர் நிலங்கள் முதல் போக பாசன வசதி பெறுகின்றன: பாசன வசதி பெறும் கிராமங்கள்: திண்டுக்கல் மாவட்டம் (பழனி வட்டம்): பாப்பம்பட்டி, சங்கராமநல்லூர் மற்றும் ஆண்டிபட்டி கிராமங்களில் உள்ள நிலங்கள். திருப்பூர் மாவட்டம் (மடத்துக்குளம் வட்டம்): கொழுமம் கிராமத்திலுள்ள நிலங்கள். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த நீர் திறப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version