இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து தமிழகம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நேற்று (நவம்பர் 12, 2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அதிமுக தலைமையின் பலவீனத்தையும் கடுமையாக விமர்சித்தார். மத்திய பாஜக அரசு, தேர்தல்களில் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான முயற்சியாகவே SIR நடவடிக்கையைத் தமிழ்நாட்டில் கொண்டுவர முயற்சிப்பதாக அமைச்சர் ஐ. பெரியசாமி குற்றம் சாட்டினார்.
அவசர கதி தேவையில்லை: “அனைவரும் மனசாட்சி தொட்டுச் சொல்ல வேண்டும், இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சூழலில், SIR மூலம் வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது போன்ற முழுப் பணிகளுக்கும் போதிய கால அவகாசங்கள் இல்லை.”சாதாரண நடைமுறை போதுமானது: புதிய வாக்காளர்கள் ஜனவரி வரை பதிவு செய்யலாம் என்பது சாதாரண நடைமுறை. இதற்கு SIR தேவையில்லை. பாஜகவின் பழைய தந்திரம்: “பல மாநிலங்களில் இந்த முறைகேடுகளைச் செய்து மத்திய பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. அதே நிலையைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். அது நிச்சயமாக நடக்காது.” வாக்குரிமை பறிப்பு: SIR படிவங்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால், அந்த விண்ணப்பம் செல்லாது என்று கூறுவது, வாக்குரிமையைப் பறிப்பதற்குச் சமம். “இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? இப்போதே சிறிய பிழைகளால் விண்ணப்பம் செல்லாது என்றால் அவர்கள் மீண்டும் வாக்காளர்களாக வர முடியாது. இது சரியானதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார் அதிமுகவின் பலம் குறித்துப் பேசுபவர்களுக்குப் பதிலளித்த அமைச்சர், அதிமுகவின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ளதாகக் கூறினார்: : “திமுக எதற்கும் பதறவில்லை. திமுக என்பது இரும்பு எஃகு கோட்டை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடைக்கோடி தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தலைவராக வந்தவர். பின் 8 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதல்வராகியுள்ளார்.” அதிமுக தலைமை: “ஆனால், அதிமுக அப்படி வரவில்லை. அவர்கள் பொதுச் செயலாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல. அதிர்ஷ்டத்தால் வந்தவர். ஒரு இடைத்தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என எதிலும் வெற்றி பெறவில்லை. காரணம் தலைமை சரியில்லை.” “அதிமுக நினைக்கிறது, எங்களுக்கு 20%, 22%, 18% வாக்குகள் உள்ளது என்று. ஆனால், 20% இல்லை, 18% இல்லை. அதற்கு கீழ் சென்றாலும் செல்லும்.” அதிமுகவின் இலக்கு: “அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்.” திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்துப் பேசிய அவர்: முக்கியத் திட்டங்கள்: அன்புச் சோலை, தாயுமானவர் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் மக்களை நோக்கிச் செல்கின்றன. “அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்யக்கூடிய சிறந்த முதல்வராகவும், அரசாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார்.” இலவச மின்சாரம்: “தமிழ்நாட்டில் இலவச மின்சாரம் முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடுக்கவில்லை என்றால் நான் உட்பட விவசாயியாக இருக்க முடியாது.” விவசாயிகளுக்கு இலவச மின்சாரமே அவர்களின் உயிரைக் காப்பாற்றி வருகிறது. விவசாயிகளை மீட்டது திமுகவே என்றும் அவர் வலியுறுத்தினார். அதிமுகவின் வைகைச் செல்வன் ‘போலி வாக்காளர்கள்’ குறித்த ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும். “அவர் கூறியது முற்றிலும் பொய்யானது. 4 வருடங்களாக வைகைச் செல்வன் எங்கு இருந்தார்? தேர்தல் வந்தவுடன் மக்கள் இடம் அழுது வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வர முடியுமா எனப் பார்க்கிறார்கள்,” என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.
















