“லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தைப் பார்வையிட்டது ஊக்கமளித்தது..” – முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து பயணத்தின் போது லண்டனில் முக்கிய வரலாற்று இடங்களை பார்வையிட்டுள்ளார். தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பயணத்தில் இருப்பவர், அப்போது அம்பேத்கர் கல்வி பயின்றபோது தங்கியிருந்த இல்லத்தையும் நேரில் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்ட இளைஞர் அறிவின் மூலம் உயர்ந்து லண்டனில் மரியாதை பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். அம்பேத்கர், பெரியாருடன் உரையாடிய வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தையும் காண நேர்ந்துள்ளதாகவும், அந்த இல்லத்தில் வியப்பு மற்றும் மரியாதை கலந்த உணர்வு ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, மார்க்சியத்தை தோற்றுவித்த ஒருவரான கார்ல் மார்க்ஸ் நினைவிடத்திலும் முதல்வர் ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.

Exit mobile version