லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் 6ஆவது அட்டவணை சுயாட்சி வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், லே நகரில் பாஜக அலுவலகம் முன் LAB (லே உச்ச அமைப்பு) சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் போது, போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததோடு, வாகனங்களையும் எரித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். பதற்றம் அதிகரித்ததால், லேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லே உச்ச அமைப்பின் போராட்டத்திற்கு ஆதரவாக, கார்கில் ஜனநாயக கூட்டணி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.