முடிவுக்கு வந்த 13 ஆண்டுகால உறவு : தமிழக அணியிலிருந்து விடைபெற்ற விஜய் சங்கர்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், இனி திரிபுரா அணிக்காக விளையாடவுள்ளார்.

தமிழ்நாடு அணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்த விஜய் சங்கர், அண்மைக்காலமாக பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியாமல் தவித்தார். கடந்த ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் தற்போது நடைபெறும் புச்சிபாபு தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், புதிய அணியில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில், திரிபுரா மாநில அணிக்காக விளையாட தீர்மானித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஆட்சேபனையின்மை (NOC) சான்றிதழ் வழங்கியுள்ளது.

“தமிழ்நாடு அணி தேர்வாளர்களிடமிருந்து பாதுகாப்பான உணர்வு கிடைக்கவில்லை. அதனால் தான் அணி மாற்ற முடிவு செய்தேன்,” என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாடு அணியுடன் விஜய் சங்கரின் 13 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் நிறைவடைந்துள்ளது.

Exit mobile version