நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழாவை ஒட்டி விளக்கு பூஜை விசேஷ நிகழ்வு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி பண்டிகை திருவிழாவானது துவங்கி நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் 1ஆம் தேதி துவங்கி ஆடி 18 ,19 ஆகிய தேதிகளில் பல்வேறு கோவில்கள் விசேஷ நிகழ்வுகள் அதிகளவு நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சடாமுனியப்பன், ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனைகள் செய்தவாறு சிறப்பு வழிபாடு நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.