தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக மாறும் வாய்ப்பில் உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையத்தின் கணிப்பின்படி, தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதியில் புயல் உருவாகக்கூடும். புயலுக்கு சர்வதேசமாக “மொந்தா” என பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, அக்டோபர் 28 ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில், ஆந்திர மாநிலத்தின் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கடற்கரை மொந்தா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 90–100 கிமீ, சில நேரங்களில் 110 கிமீ வரை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வீட்டுப்பக்கங்களிலும் கடற்கரைகளிலும், மக்கள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ள வானிலை மையம் அழுத்தமாக கேட்டுக்கொள்கிறது.

















