விமானத்தை பிடிக்க அவசரமாகச் சென்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், தனது மனைவியை ஜூனாகத்தில் மறந்துவிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலுவலக பணிகளுடன் சோம்நாத் ஜோதிர்லிங்கம் மற்றும் தேசிய கிர் வனப்பகுதியை தரிசிக்கவும் தனது மனைவி சாதனாவுடன் குஜராத் சென்றிருந்தார் சவுகான். மாநிலத்தின் விவசாய வளர்ச்சிப் பணிகளை பார்வையிட ஜூனாகத்தில் நிலக்கடலை ஆய்வு மையத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
அங்கு, மனைவியை காத்திருப்பு அறையில் அமர வைத்து, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், ராஜ்கோட்டுக்கான விமானத்தை பிடிக்க அவசரமாகக் கிளம்பியுள்ளார். அவருடன் வந்த 22 வாகனங்கள் கொண்ட பாதுகாப்புக் கூட்டணி மிகுந்த வேகத்தில் நகர்ந்துள்ளது.
பின்னர் தான் மனைவியை ஜூனாகத்தில் விட்டுவிட்டது நினைவுக்கு வந்ததும், அவர் உடனே மீண்டும் ஜூனாகத்திற்கு திரும்பியுள்ளார். மனைவியை அழைத்துக் கொண்டுவிட்டு பிறகு ராஜ்கோட்டிற்குச் சென்றார் அமைச்சர்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.