தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை அக்கட்சியினர் மாநிலம் முழுவதும் பெரும் பலப்பரீட்சையாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையப் பாடுபடுவோம் என்ற சூளுரையுடன் பிறந்தநாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் அமைந்துள்ள சாவடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவிற்கு, வத்தலக்குண்டு மேற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், கூடியிருந்த பொதுமக்களுக்கும் கட்சியினருக்கும் இனிப்புகளை வழங்கிக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அதிமுகவின் பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். குறிப்பாக ஒன்றிய அவைத்தலைவர் வி.டி.என்.கோபால், ஒன்றிய துணை செயலாளர் துரைராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மேலும், ஒன்றிய இளைஞரணி செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இணைச்செயலாளர் மற்றும் ஒன்றிய துணைச்செயலாளர் மணிகண்டன், முன்னாள் ஒன்றிய செயலாளர் எம்.வி.எம். பாண்டியன், முன்னாள் ஒன்றிய தலைவர் ஓ.ஆர்.ராஜேந்திரன், ஒன்றிய இணைச் செயலாளர் பெருமாயி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, விராலிப்பட்டி காலனி பகுதிக்குச் சென்ற நிர்வாகிகள், அங்குள்ள பொதுமக்களுடன் இணைந்து எம்.ஜி.ஆரின் புகழைப் பாடும் பாடல்களை ஒலிபரப்பி இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். வத்தலக்குண்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுவனம்பட்டி, பழைய வத்தலக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்கள் அனைத்திலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா திருவிழாக் கோலமாகத் காட்சியளித்தது.
இந்த விழாவில் மாவட்ட சிறுபாண்மைபிரிவு துணை செயலாளர் ஜான், பேரூர் சிறுபாண்மை பிரிவு செயலாளர் கனி பாய், மற்றும் நிர்வாகிகள் செந்தமிழ் பாண்டியன், ஜெயப்பிரகாஷ், ராஜா, சந்திரன், ராமமூர்த்தி, முருகேசன், மனோகரன், உதயகுமார், கண்ணன், சிவமுருகன், வேல்முருகன், சதிஷ்குமார், மருதமணி, பால்பாண்டி, பாலன் என ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிதிரண்டு பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய நிர்வாகிகள், “தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், ஏழை எளிய மக்களின் நலன் காக்க மீண்டும் இரட்டை இலை ஆட்சி அமைய வேண்டும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காட்டிய வழியில், பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சர் ஆசனத்தில் அமர வைப்பதே நமது இலக்கு” என உறுதிபடத் தெரிவித்தனர். 2026 தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பிரச்சாரமாகவே இந்த விழா அமைந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
