திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர், மறையூர், மூணார் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பாய்ந்து செல்கின்றன. தமிழக அரசுப் பஸ்கள், கேரள அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்குவாகனங்கள், மேலும் இரு மாநில எல்லை மலைக்கிராம மக்களை ஏற்றிச் செல்லும் ஜீப்கள் எனப் பெரும் போக்குவரத்து இவ்வழியில் நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள் சென்றடையும் இந்த மலைவழிப் பாதை, தமிழக எல்லை சின்னார் செக் போஸ்ட் வரை சுமார் 13 கிலோமீட்டர் நீளத்துக்கு மிகவும் மோசமான சாலைநிலையால் பயணிகள் கடும்
ஏழுமலையான் கோவில், கோடந்தூர் மாரியம்மன் கோயில் போன்ற புகழ்பெற்ற தலங்களுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கேரள மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் பயணிக்கின்றனர். மேலும், கல்லூரி மாணவர்கள், டிரக்கிங் குழுக்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் 9/6 செக் போஸ்ட் வழியாக இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் கேரள எல்லையை கடந்தவுடன் சாலைகள் நன்றாக பராமரிக்கப்பட்டிருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக எல்லைக்குள் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மேடுகள், பள்ளங்கள், குழிகள் நிறைந்த சாலையில் ஓட்டுவது மிகவும் கஷ்டகரமானதாக இருப்பதால், “புது சாலை போடாவிட்டாலும் பரவாயில்லை; இருந்த சாலையை சமனாக்கினாலே போதும்” என வலியுறுத்துகின்றனர். மலைப் பகுதிகளில் சாலை அகலப்படுத்தப்பட்டு, கேரள மாநிலத்திலுள்ளதைப் போல சீரமைப்பு செய்யப்படின் சுற்றுலா வளர்ச்சிக்கும், வணிகப் பயணங்களுக்கும் பெரும் வசதி கிடைக்கும் என சுற்றுலா ஆர்வலர்களும் வணிகர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், சீரமைப்பு செய்யப்படின் இரு மாநிலங்களுக்கும் கூடுதல் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் அதிகரிக்கும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
