இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு : போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே

மும்பை : இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே போராட்டத்தை அறிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பாரம்பரிய எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. இவ்விரு அணிகளுக்குமிடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.

ஆனால், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவமும், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளின் அத்துமீறல்களும் குறித்த கோபமும் கேள்விகளும் எழுந்துள்ளன. இந்நிலையில், பாகிஸ்தானுடனான போட்டியை எதிர்த்து போராட்டம் நடத்த உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :
“ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக பாயாது என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால் இப்போது எப்படி போரும், கிரிக்கெட்டும் ஒன்றாக இயங்க முடியும் ? அவர்கள் தேசப்பற்றை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இந்திய அணி நாளைய போட்டியில் விளையாடும் மூலம் பணத்தை சம்பாதிக்கப் போகிறது,” என்றார்.

மேலும், “நாளை சிவசேனா மகளிர் அணியினர் மஹாராஷ்டிராவின் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்றும் தெரிவித்தார்.

Exit mobile version