இந்தியர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது : கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

வாஷிங்டன் : “இந்தியர்கள் மற்றும் பிற நாட்டுப் பணியாளர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டவற்றுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் திட்டங்கள் குறித்து பேசியபோது, “ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் அமைக்கின்றன. இந்தியாவிலிருந்து ஊழியர்களை நியமிக்கின்றன. ஆனால், அமெரிக்கத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்,” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது: “அமெரிக்காவின் சுதந்திரம் மற்றும் வளங்களை பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. ஆனால் அந்த லாபம் அமெரிக்காவுக்கு பாதி வருவதில்லை. வெளிநாடுகளில் முதலீடு செய்கின்றன. இது இனி தொடரக்கூடாது.”

“எனவே, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும், சீனாவில் தொழிற்சாலைகள் அமைப்பதையும் நிறுத்தி, அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க கவனம் செலுத்த வேண்டும்,” என டிரம்ப் வலியுறுத்தினார்.

Exit mobile version