மீண்டும் அதிரடி காட்டும் டிரம்ப் – இந்திய அரிசி இறக்குமதிக்கு தடை

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அரிசி ஏற்றுமதி தடை செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனொல்டு டிரம்ப் மீண்டும் ஒரு தடையை பிறப்பித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் அரிசி இறக்குமதி செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது இந்திய அரிசி இறக்குமதி ஏன் அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரியிலிருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார். அப்போது இல்லை என்றும் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் அந்நாட்டின் கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசண்ட் பதில் அளித்தார். இதையடுத்து இந்தியா அரிசியை அமெரிக்காவில் குவிப்பது தடை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version