வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே அசுர வேகத்தில் ஓடிய கார் பாதுகாப்பு தடுப்புகளில் மோதிய சம்பவம் திடீர் பதற்றத்தை உண்டாக்கியது. சம்பவத்தின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் மாளிகையில் இருந்தார்.
அடையாளம் தெரியாத நபர், மோதிய பின்னர் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளால் சுற்றி பிடிக்கப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவருடைய தேசியத்துவம் பற்றிய தகவல் போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்தின்போது வெள்ளை மாளிகைக்கு எந்தவித சேதமும் இல்லை என்றும், அதிபர் பாதுகாப்பாக உள்ளார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், வெள்ளை மாளிகை சுற்றியுள்ள சாலைகளில் தற்காலிக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது.

















