17 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பாராட்டு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வடகாடு ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களின் நீண்டகால அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்த தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக, அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள வடகாடு ஊராட்சியின் அமைப்பைக் குறித்த தகவல்கள்: வடகாடு ஊராட்சியில் வண்டிப்பாதை, மேட்டுப்பட்டி, மாஞ்சோலை, கண்ணனூர், கும்ளா மரத்துப்பட்டி, கோமாளிபட்டி பால்கடை, புலிக்குத்திக்காடு, கோட்டை வேலி, சுரக்காய்பட்டி பெத்தேல்புரம், மாட்டுப்பட்டிக்காடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட 17 உக்கடை கிராமங்கள் அடங்கியுள்ள  இப்பகுதியில் 5000-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான மின்சார வசதி, சாலை வசதி, நியாயவிலைக் கடை போன்ற அத்தியாவசியத் தேவைகள், அத்துடன் மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் அரசு நிறைவேற்றித் தந்துள்ளது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், வடகாடு ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இயற்கையாக விளையும் மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, தக்காளி, முட்டைகோஸ், கத்தரி, திராட்சை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சீர்வரிசையாகக் கொடுத்து மக்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர். மலைவாழ் மக்களின் இந்த நெகிழ்ச்சியான செயல், அரசு திட்டங்கள் கடைக்கோடி மக்களைச் சென்றடைந்திருப்பதையும், மக்களின் மனநிறைவையும் காட்டுவதாக அமைந்தது.

Exit mobile version