இன்றைய ராசிபலன் – ஜூலை 16, 2025 (புதன்கிழமை)

ஜூலை 16, 2025, புதன்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு அலைச்சல் மிகுந்த நாளாக இருக்கும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
எடுக்கும் முயற்சிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும் இதனால் தேவையில்லாத மன உளைச்சலில் இருந்து விடுபடலாம்.
வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடக்க வேண்டும்
பண விஷயங்கள் கவனமாக கையாள வேண்டும் பணம் இழப்பு இதனால் ஏற்படும்.
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடக்க வேண்டும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
மன உளைச்சல் காரணமாக ஆரோக்கியம் சற்று பாதிப்படையும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சிறப்பாக அமையப் போகிறது
இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சி உணர்வீர்கள்
முக்கிய முடிவுகளை எடுத்து வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்ல ஏதுவாய் இருக்கும்
சகப் பணியாளர்கள் உங்களிடம் நன்முறையில் நடந்து கொள்வார்கள்
துணையுடன் அனுசரித்து செல்வீர்கள்
பணவரவு திருப்தியை தரும்
சொத்துக்கள் சேர்ப்பதில் மும்முரம் காட்டுவீர்கள்
ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும்
கொடுக்கல் வாங்கல் திருப்தியை தரும்
சொத்துக்களும் விலை உயர்ந்த பொருட்களும் சேர்ப்பதில் முற்படுவீர்கள்
இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் அமையும்.

மிதுன ராசி நேயர்களே!


உழைப்பிற்கே பெயர் போன நீங்கள் உழைத்து முன்னேறக்கூடிய அமைப்பை இயற்கையிலேயே பெற்றுள்ளீர்கள்
அதனால் எங்கு சென்றாலும் கடின உழைப்பின் மூலம் உங்களுடைய முன்னேற்றம் மேம்படும்
இன்று நல்ல முறையில் பணியாற்றி மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்
புதிய இடத்தில் பணிகள் அமைய வாய்ப்புகள் ஏற்படும்
உங்கள் தொழில் சிறப்பாகவும் முன்னேற்றம் ஆகவும் அமைய கூடிய நாள் இன்று
ஓரளவு பண விஷயங்கள் திருப்தியை தரும்
ஆரோக்கியம் மேம்படும்
உங்கள் துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது
மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை செலுத்த வேண்டும்.

கடக ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு ஓரளவு திருப்தியான நாளாக அமையும்
பணிகளை திட்டமிட்டு செய்வதன் மூலம் விரைவாக முடிப்பீர்கள்
யாரிடமும் கடுமையாக பேச வேண்டாம் அது தேவையில்லாத வாக்குவாதத்தில் முடியும்
முடிந்த அளவு தியானங்களை மேற்கொள்வது நல்லது
சற்று மன உளைச்சலின் காரணமாக ஆரோக்கியம் திருப்தியை தராது.
வரவுக்கு மேல் இன்று செலவுகள் அதிகமாக காணப்படும்
செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும்
உணவு பழக்க வழக்கங்களில் சரியான முறையை கடைபிடிக்க வேண்டும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை தொடர்ந்து செலுத்துவது நல்லது
தூரத்து பயணங்கள் நன்மையை தரும்.

சிம்ம ராசி நேயர்களே!

விழித்தோற்றத்தில் கடுமையாக இருந்தாலும் உள்ளுக்குள் அன்புணர்வோடு பழகுவீர்கள்.
யாருக்கும் தயவு தாட்சண்யம் பார்க்க வேண்டாம்.
வேலை விஷயங்களில் கவனமுடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள் மேல் அதிகாரி பாராட்டுவார்
வேலைப்பளு காரணமாக சற்று ஆரோக்கியம் மாறுபடும்
செலவுகள் அதிகமாகும்
புதிய முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது
மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
துணையுடன் ஒத்துப் போக வேண்டும்
சில சமயங்களில் தொழிலில் போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சிறப்பான மனநிலையுடனும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள்
புதிய இடத்திற்கு மாற்றமும் ஏற்படும் இதனால் நீங்கள் எதிர்பார்த்தது நல்லபடியாக முடிந்த மனநிலையில் மகிழ்ச்சியில் இருப்பீர்கள்.
இன்று நான் முழுவதும் பணவரவு திருப்தியை தரும்
புதிய சொத்துக்களும் விலை உயர்ந்த பொருள்களும் வாங்குவீர்கள்
துணை அனுசரித்து செல்வார்
இன்று உற்சாகமான நாள் என்பதால் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது
மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள்
தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம் ராசி நேயர்களே!

இன்று தொட்டதெல்லாம் தொடங்கும் நாளாக அமையப் போகிறது
நேற்று இருந்த நிலை சற்று மாறி இன்று ஓரளவு திருப்தி நாளாக அமையும்
செயல்களில் சாதுரியத்துடனும் புத்திசாலித்துடனும் சமாளிப்பீர்கள்
தெய்வ வழிபாடு உங்களை மன நிம்மதியுடன் வைத்திருக்க உதவும்
பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களை அனுசரித்து நடப்பர் பாராட்டுக்களையும் தெரிவிப்பார்கள்
மேல் அதிகாரி அனுசரித்து நடந்தால் வெற்றி உண்டாகும்
இன்று வரும் பணத்தின் மூலம் வியாபாரத்தை பெரிது செய்வீர்கள்
புதிய முயற்சிகளை ஓரிரு நாட்கள் தள்ளி வைப்பது நல்லது
இன்று ஓரளவு சிறப்பான நாள் என்பதால் ஆரோக்கியம் மேம்படும்
மாணவர்கள் ஆசிரியரிடம் நல்ல பெயர்களை வாங்குவார்கள்
பெற்றோர்கள் குழந்தைகள் மேல் அதிக கவனத்தை செலுத்த வேண்டிய நாளாக அமையும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் ஓரளவு உற்சாகமான நாளாக அமையும்.
நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்
பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
சக ஊழியர்களின் பாராட்டை பெறுவீர்கள்
பண விஷயங்களில் வாக்குறுதிகளை தர வேண்டாம்
வியாபாரத்தில் ஓரளவு திருப்தி தரும்
மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை செலுத்த வேண்டும்
புதிய வீடு வாங்குவதற்கு திட்டமிட்டு அதற்கான செயல்களை ஆரம்பிப்பீர்கள்
உறவினர்களின் உதவிக்கரம் கிடைக்கும்
தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க வேண்டும் இதனால் ஆரோக்கியம் சற்று பாதிப்படையும்
இறைவழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.

தனுசு ராசி நேயர்களே!

ஓரிரு நாட்களாக சுமாரான பலன்களை உங்களுக்கு அமையும்
பணிகளை திட்டமிட்டு செய்யுங்கள்
கடின உழைப்பு தேவைப்படும் நாளாக அமையப்போகிறது
இதனால் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்
மேலதிகாரி உங்களை தரக்குறைவாக நடத்த வாய்ப்புகள் ஏற்படும் மனம் தளர வேண்டாம்
துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்
பணம் ஓரளவு திருப்தி தரும்
கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்
மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
பெற்றோர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
நட்பு வட்டாரங்கள் கூட்டு தொழில் செய்வோர் கவனமுடன் நடக்க வேண்டும்.

மகர ராசி நேயர்களே!

இன்றைய நாள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நாளாக அமையும்
பொறுமை மட்டும் கடைபிடிக்க வேண்டும்
வீட்டில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைக்க வேண்டும்
துணையுடன் அனுசரித்து செல்லுங்கள்
தொழில் சிறப்பாக அமையும்
தொழில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திவீர்கள்
அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும்
மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும்
மாணவர்கள் ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள்
ஆரோக்கியம் சிறப்பாக அமையும்
கொடுக்கல் வாங்கலில் திருப்தி தரும்
காதல் திருமணம் கைகூடும்
தூரத்து பயணம் நன்மையியை தரும்.

கும்ப ராசி நேயர்களே!

தொடர்ந்து மகிழ்ச்சியை உணர்வீர்கள்
நல்ல திருப்தியான மனநிலை உண்டு
எடுத்த காரியங்கள் வெற்றி பெறும்
பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும் இதனால் மேல் அதிகாரி பாராட்டுவார்
பணவரவு திருப்தி தரும்
காதல் கைகூடும்
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்து ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள்
இன்று அமைதியான சூழ்நிலை உருவாகுதல்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
இன்று நிலம் வாங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

மீன ராசி நேயர்களே!

இன்று நீங்கள் கடின உழைப்பின் மூலம் மற்றவர்களை கவருவீர்கள்
சற்று மன உளைச்சலில் மனம் சோர்வடையும்
ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது
கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்
இதனால் தேவையற்ற பண இழப்பை பெறுவீர்கள்
துணையுடன் அனுசரித்து செல்வீர்கள்
மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும்
தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்
விவசாயத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இன்று கிடைக்கும் நாளாக அமையும்
தொடர்ந்து கடின உழைப்பு செய்யும் நாளாக அமையும்.

Exit mobile version