ஸ்ரீ விசுவாவசு புரட்டாசி மாதம் 19 ஆம் தேதி
அக்டோபர் 05, 2025 ஞாயிற்றுக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – இன்று காலை 08.02 வரை சதயம் நட்சத்திரம் பின்பு பூரட்டாதி நட்சத்திரம் கும்பம் ராசி
நல்ல நேரம் : காலை 10. 45 முதல் 11.45 வரை மாலை 03.15 முதல் 04.15 வரை
ராகு காலம் : மதியம் 04.30 மணி முதல் மாலை 06.00 வரை
எமகண்டம் : மதியம் 12.00 முதல் மதியம் 01:30 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 03:00 மணி முதல் மதியம் 04.30 மணி வரை
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.
மேஷ ராசி நேயர்களே!
சந்திர பகவான் ராசிக்கு 11 இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதாரம் உயர்ந்த நிலைக்கு செல்வீர்கள் நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் உருவாவார்கள் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான சிறப்பான நாள் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு புதிய முடிவுகள் எடுப்பதில் முன்னேற்றம் ஏற்படும் பணியாட்கள் உங்களுடைய பேச்சுகளை கேட்பார்கள் மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்குவதாக இருந்தால் வீடு கட்ட வாங்கலாம் எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்காக வாங்க கூடாது புதிய வாடிக்கையாளர்கள் வருகைகள் முன்னேற்றத்தை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!
ராசிக்கு 10 இடத்தில் சந்திரன் பாகவான் பயணம் செய்கிறார் இன்று நண்பர்கள் மூலமாக மற்றும் உறவினர்கள் மூலமாக உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது தொலைதூர பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களுடன் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டு அவர்கள் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களில் உதவி புரிவார்கள் உங்களுடைய வேலை ஆட்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது புதிய முடிவுகள் எடுப்பதில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும் நிதானத்தை கையாளவும் திருமணத்துக்காக காத்திருப்பவர்கள் இன்று உங்களுடைய வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் இன்று பணவரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும் வியாபாரத்தில் புதிய யுத்திகள் மூலமாக முன்னேற்றம் அடைவீர்கள் பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சியும் பொருளாதார ரீதியான முன்னேற்றங்களையும் கொடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!
ராசிக்கு 09 ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மனமகிழ்ச்சிகள் அதிகரிக்கும் காதலர்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சென்று வருவீர்கள் கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும் உணவு துறைகளை சாதகமான வாய்ப்புகள் உண்டாகும் உடன் இருப்பவரிடம் விட்டுக் கொடுத்து செல்வது மூலமாக மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டுபெண்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு அப்பாவுடைய சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களை பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் தீர்ப்பு வரும் காதலர்களுக்கு மிகவும் சிறப்பான நாள்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழிபட வேண்டிய தெய்வம் : குலதெய்வம் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசிக்கு எட்டாம் இடத்தில் பயணம் செய்வதனால் புதிய முயற்சிகள் எடுபடுவதை தவிர்க்க வேண்டும் வீண் விவாதங்கள் மற்றும் போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் சாப்பிடக்கூடாது வண்டி வானங்களில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் பத்திரத்தில் கையெழுத்துக்கள் இடுவதில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதோ அல்லது வாக்கு கொடுப்பது போன்றவற்றில் ஈடுபடக்கூடாது பெண்கள் தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும் தொழிலில் அதிக அக்கறை செலுத்தினால் லாபம் உண்டு இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : காலபைரவர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!
ராசியில் சந்திரன் பகவான் பயணிக்கிறார் அதிகமான சிந்தனைகள் அதிகமான எண்ணங்கள் இருக்கும் பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும் உங்களுடைய பலவீனம் இன்று பலமாகும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள் உங்களுடைய நண்பர்கள் மூலமாக உங்களுக்கு அதிகமான நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு புதிய தொழில் சார்ந்த விஷயங்களில் முயற்சி எடுப்பீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் பெண்கள் மூலமாக இன்று பொருளாதர நிலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும் ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் காட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள் கடன் பிரச்சனைகளிலிருந்து சிறிது விடுபடுவீர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு அதிகமான ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!
ஆறாம் வீட்டில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் பாகப்பிரிவினையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் உத்தியோகம் சார்ந்த பணிகளில் மறைமுகமான எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் மிக கவனமான முறையில் வேலை செய்ய வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!
ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாக இருப்பீர்கள் பழைய நட்புகளை சந்திப்பீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு ஆதாயமும் உண்டு மகிழ்ச்சியும் உண்டு துணைவர் உறவு வழியில் அனுசரித்து செல்வது மூலமாக உங்களுக்கு அதிகமான நன்மைகள் ஏற்படும் தொலைதூர பயணத்தினால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு கணவன் மனைவி ஒற்றுமை மிக இன்று மேலோங்கப்படும் உங்களுடைய குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டும் அளவுக்கு இருக்கும் புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும் மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள் எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் உறுதியாக உங்களுக்கு வெற்றி உண்டு உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற பாராட்டுக்கள் உறுதியாக கிடைக்கும் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளும் உண்டாகும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!
சந்திர பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் பொருளாதார விஷயங்களை நல்ல முன்னேற்றம் உண்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக முயற்சி எடுப்பீர்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் காதலர்களுக்கு கலைப் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும் மனதளவில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்
தாய்மாமா உறவு உங்களை மகிழ்ச்சி படுத்தும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும்
நட்பு மற்றும் உறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் மாணவ மாணவியருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : காளியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!
சந்திர பகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதினால் தைரியம் வீரியம் விடாமுயற்சி கொஞ்சம் அதிகமாக எடுக்க வேண்டி இருக்கும் தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஏற்றவாறு வெற்றி மாலை சூடுவீர்கள் உயர் அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள், வியாபாரத்தில் நல்ல ஒரு வெற்றி கிடைக்கும் ஒப்பந்தங்களில் இருந்து வந்த தாமதம் விலகும் பழைய சிக்கல்கள் விலகும் அலுவலக பணிகள் துரிதும் ஏற்பட்டு மாற்றங்கள் உண்டு அதேபோல் உங்களை விட வயது குறைந்தவர் மூலமாக உங்களுடைய பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும் இளைஞர்களுக்கு இன்றைய நாளில் இருக்கிற எல்லா விஷயமும் வெற்றி குடும்ப பெண்களுக்கு கணவரின் விட்டாரின் மூலமாக நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்புகள் உண்டு வங்கித் துறை மருத்துவ துறை மற்றும் அரசு துறையில் பணிபுரிவர்களுக்கு மகிழ்ச்சியடைவர்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பஞ்சமுக விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!
சந்திர பகவான் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும் நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் காரிய சித்தி உண்டு காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும் நாள் சுப காரிய நிகழ்ச்சி நடைபெறும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள் அரசு வழியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும் பெரியோர்களின் ஆலோசனை மூலமாக முன்னேற்றத்தை காண்பீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : முத்துமாரியம்மன் மற்றும் விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!
சந்திரன் பகவான் ராசியில் பயணம் செய்கிறார் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டு பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள் உங்களுடைய சகோதரிகள் மூலமாக உங்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய செயல்பாடுகள் நடைபெறும் உங்களைவிட வயது குறைந்த நபர்கள் உங்களுக்கு உறுதியாக உறுதுணையாக இருப்பார்கள் மருத்துவ துறை கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட துறையில் வேலை பார்ப்பவர்கள் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும் பெண்கள் மூலமாக உங்களுக்கு மகிழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது தங்க நகைகள் மற்றும் வண்டி வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் பொருளாதார ரீதியான சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் சிறிது குறைவதற்கான அமைப்புகள் உண்டாகும் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் பொருளாதாரத்தில் மிகச் சிறப்பான சூழ்நிலைகள் ஏற்படும் புதிய வீடு மனை வாங்குவதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் பெரியப்பாவழி உறவுகள் மூலமாக மிகப்பெரிய முன்னேற்றத்தை காண்பதற்கான வாய்ப்புகளும் உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : கிருஷ்ணன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மீன ராசி நேயர்களே!
ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் சஞ்சாரம் செய்வதினால் எதிர்பாராத சிறு செலவுகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது உங்களுக்கு நல்லது வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும் வண்டி வாகனங்களை செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும் இன்றைய நாளில் நீங்கள் மிக முக்கியமான முடிவு எடுப்பதை தவிர்க்கவும் நீர்நிலைகள் சார்ந்த பகுதியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் தேவை கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது குடும்ப சகோதரரால் சுப விரய செலவுகள் ஏற்படும் பெண்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் தன்னுடைய விவரங்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : மாரியம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.