இன்றைய ராசிபலன் – ஜூலை 31, 2025 (வியாழக்கிழமை)

ஜூலை 31, 2025, வியாழக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. இன்றைய பணியிடத்தில் சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். மேல் அதிகாரியின் அன்பையும் பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் புதிய திட்டங்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள் கணவன் மனைவி இடையே நல்ல சூழ்நிலை உருவாகும் நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும் நாள் மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். ஆரோக்கிய மேம்படும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இன்று காணப்படும். காதல் கைகூடும்
பண வரவுகள் திருப்தியை தரும். ஆரோக்கிய மேம்படும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும் நாள் தொழில் நல்ல முறையில் முன்னேற்றம் காணப்படும் வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன் படுத்திவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே!


இன்று நாள் முழுவதும் இறைவழிபாடு உங்களை மன அமைதியுடன் வைத்திருக்க உதவும் தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் மேல் அதிகாரிகளின் திருப்தியை பெரும் வகையில் பணிகளை முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள் இன்று செலவுகள் ஏற்படும் நாள் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும் ஆரோக்கியம் ஓரளவு திருப்தியை தரும் வியாபாரத்தில் சிறு சிறு தடைகள் வந்து மறையும்.

கடக ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்களுக்கு மன நிம்மதியை சற்று உலுக்கி பார்க்கும் நாளாக அமையப்போகிறது கவனமுடன் இருக்க வேண்டும் அரசு வேலையில் உள்ளவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் என்று படிப்பில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது நல்லது தூரத்து பயணங்கள் நன்மை தராது கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தர வேண்டாம். உங்கள் துணையுடன் தேவையற்ற மனக்கசப்புகள் வந்து மறையும். மன உளைச்சலின் காரணமாக சற்று ஆரோக்கியம் கெடும். பண விஷயங்களில் கவனமாக இருப்பது நன்மையை தரும் இன்று இறை வழிபாடு உங்கள் மன அமைதியை தர உதவும்.

சிம்ம ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையப் போகிறது. வாழ்க்கையில் பல நல்ல முன்னேற்றங்களை பெறக்கூடிய முடிவுகளை எடுப்பீர்கள். பணி இடங்களிலும் உங்களுக்கு மதிப்பும் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எடுப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி ஆசிரியரிடம் பாராட்டை பெறுவர். கொடுக்கல் வாங்கல் ஓரளவு திருப்தியை தரும். தூரத்து பயணங்கள் நன்மையை தரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். ஆரோக்கியம் சிறப்பாகும்.

கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் ஓரளவு திருத்தி தரும் நாளாக அமையும். இறைவழிப்பாடு உங்கள் மன அமைதியை மேம்படுத்த உதவும். பணி செய்யும் இடத்தில் பாராட்டு குவியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். துணை உங்களை புரிந்து நடப்பார். இன்று நாள் முழுவதும் உற்சாகமுடன் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

துலாம் ராசி நேயர்களே!

இன்றைய ஒரளவு மன அமைதி ஏற்படும் நாள். சற்றே கவனமுடன் செயல்படுவதால் இந்த நாளை வெற்றிகரமாக மாற்றும். தேவையற்ற மன உளைச்சல் கவனக் குறைவுகள் ஏற்படும். துணையுடன் சிறு சிறு மன கசப்புக்கள் வந்து மறையும். பல விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. யாரிடமும் எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று இறைவழிபாடு உங்களை மன அமைதியாக வைத்திருப்பதற்கு தியானங்கள் மேற்கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஓரளவு மட்டுமே இலாபத்தை எதிர்பார்க்க வேண்டும். மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். உறவினர்கள் உதவியை எதிர்பார்க்க வேண்டாம் ஆரோக்கியம் ஓரளவு திருப்தியாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே!

இன்று நன்மை தரும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை திறம்பட முடிப்பீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் பாராட்டையும் அக்கறையையும் பெறுவீர்கள். மேலதிகாரி உங்களை பாராட்டுவார். கணவன் மனைவி புரிந்து நடப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சொத்துக்கள் வாங்க முயற்சிகள் நடக்கும் ஆரோக்கியம் மேம்படும்.

மகர ராசி நேயர்களே!

இன்று நீங்கள் நினைத்தது எல்லாம் நல்லதாக நடக்கும் நாள். பேச்சில் மட்டும் கவனத்தை வைக்க வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்தால் இன்றைய நாள் மன நிம்மதியுடன் செல்லும் நாளாக இருக்கும். மேலதிகாரிகளின் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பண வரவு ஓரளவு திருப்தியை தரும். வியாபாரத்தில் பெரிய லாபத்தை இன்று எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை செலுத்துவது நல்லது. உறவினர்களிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். வெளிநாட்டு பயணங்களை ஓரிரு நாட்களுக்கு ஒத்திவைப்பது நல்லது.

கும்ப ராசி நேயர்களே!

இன்று ஓரளவு திருப்தி தரும். இறைவழிபாடு தியானம் இந்த நாளை உங்களை கடக்க உதவும் கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை கொடுத்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்க வேண்டாம் மாணவர்கள் தொடர்ந்து படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் ஆரோக்கியம் திருப்தியை தராது வியாபாரிகள் தொடர்ந்து பொறுமையுடன் வியாபாரத்தை மேற்கொள்வது நல்லது.

மீன ராசி நேயர்களே!

இன்று நாள் ஓரளவு திருப்திகரமாக நாளாக அமையும். பெருத்த லாபத்தை எதிர்பார்ப்பதை விட சிறு சிறு லாபத்தை எதிர்பாருங்கள் அது மன திருப்தியை கொடுக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் எந்த வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம். இன்று நாள் முழுவதும் அமைதி இந்த நாளை சிறப்பான நாளாக மாற்றும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். மன உளைச்சலில் ஆரோக்கியம் திருப்தி தராது. மேல் அதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பதன் மூலம் இன்று தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம்.

Exit mobile version