ஜூலை 28, 2025, திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!
இன்று ஓரளவு சுமாரான நாளாக அமையும். முக்கியமான சில திட்டங்களை இன்று எடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இருவரிடமும் அனுசரித்துச் செல்வது அந்த நாளை நிம்மதியாக மாற்றும். வரவு செலவுகளில் கவனம் தேவை. தேவையற்ற கொடுக்கல் வாங்கலை தவிர்க்கவும். இன்று ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் கடின முயற்சி தேவைப்படும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இன்று இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- அஸ்வினி : அலைச்சல்
- பரணி : வேலையில் கவனம் தேவை
- கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.
ரிஷப ராசி நேயர்களே!
இன்று ஓரளவு சிறப்பான நாளாக அமையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள். தூரத்து பயணங்கள் நன்மையை தரும். பல விஷயங்களில் ஓரளவு திருப்தியை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே நல்ல உறவு ஏற்படும். இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது வெற்றி அடையும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- கிருத்திகை : தொழிலில் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்.
- ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
- மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்
மிதுன ராசி நேயர்களே!
இன்று ஓரளவு நன்மை தரும் நாளாக அமையும். பல சமயங்கள் விரக்தியாக உணர்வீர்கள். கவலைப்பட வேண்டாம் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம் உண்டு. உங்கள் மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறு சிறு மன சஞ்சலங்கள் வந்து மறையும். இன்று ஆரோக்கியம் திருப்தியை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மிருகசீரிஷம் : முயற்சி
- திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
- புனர்பூசம் : அமைதியான நாள்
கடக ராசி நேயர்களே!
இன்று சற்று மன அமைதி குலையும் வகையில் உங்களை சுற்றி உள்ளவர்கள் மற்றும் சக ஊழியர்கள் உங்களை பதம் பார்ப்பார்கள். நிலமை சீராகும் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது. சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவது சற்று கடினமானது. குடும்பத்தில் பிரச்சனைகளை தவிர்க்க அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். நிதி நிலைமை ஓரளவு திருப்தியை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : திறமைகளை விழிப்புணர்வீர்கள்.
- பூசம் : புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.
- ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே!
இன்று நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க இது பயன்படும். வேளையில் மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். கௌரவம் உண்டாகும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் சிறு தடைகள் ஏற்பட்டு பின்பு லாபம் ஏற்படும். பணவரவு ஓரளவு வரவு செலவு திருப்தியை தரும். இன்று கால் அசதியாய் உணர்வீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மகம் : மன நிம்மதி
- பூரம் : மகிழ்ச்சி
- உத்திரம் : உற்சாகமான நாள்
கன்னி ராசி நேயர்களே!
இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமைய போகிறது. வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். காதல் விவகாரங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். பணியில் பொறுமையை கடைப்பிடித்து வெற்றி கொள்ள வேண்டும். நிதிநிலை போதுமானதாக இருக்க வரவு செலவுகளை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஆரோக்கியத்தில் திருப்தி ஏற்படும் இன்று நாள் முழுவதும் மன அமைதியை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
- ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
- சித்திரை : ஆதாயம் கிடைக்கும்
துலாம் ராசி நேயர்களே!
தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் எல்லாவற்றையும் அமைதியுடன் கடக்க வேண்டிய நாள். இன்றைய நாளை மன மகிழ்ச்சியுடன் வைத்திருக்க உதவும். தேவையில்லாத மன குழப்பங்களை தவிர்த்து உங்கள் வேலைகளில் கவனத்தை செலுத்துங்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரத்தில் திருப்தி தரும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
- சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
- விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்
விருச்சிக ராசி நேயர்களே!
இன்றைய நாளை பொறுமையுடன் கடப்பது நன்மையை தரும். இறைவழிபாடு மன குழப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்கும். பணிகளை வரையறுத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திணறுவீர்கள். இன்று நிதிநிலைமை ஓரளவு திருப்தியாக காணப்படும். சற்று மன குழப்பத்தினால் இன்று நாள் முழுவதும் தூக்கத்தை இழப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஓரளவு ஒற்றுமை ஓங்கும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
- விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
- அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
- கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை இழுக்க வேண்டாம். திட்டமிட்டு வேலை செய்தால் சரியான நேரத்தில் முடிக்கலாம். உங்கள் சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். இன்று சம்பாதிப்பதை விட செலவுகள் தான் அதிகம் ஏற்படும். பணத்தை சிக்கனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை இல்லை என்றால் மருத்துவ செலவுகள் வர நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவன குறைவாக காணப்படுபவர்கள். வெளிநாட்டுச் செய்தி இன்று உங்கள் மனக் குழப்பத்திற்கு ஆறுதலாக அமையும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- மூலம் : அலைச்சல் பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
மகர ராசி நேயர்களே!
இன்று நாள் முழுவதும் சிறப்பான நாளாக அமையப்போகிறது. இன்று பல வேலைகளை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள் அது வெற்றியை தரும். இன்றைய நாளில் செய்தால் விருத்தியடையும். இன்று பொன் ஆபரணம் உருவாக்கலாம். வெளிநாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவார்கள். கணவன் மனைவி இடையே நல்ல ஒற்றுமை இருக்கும். இன்று ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
- திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
- அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.
கும்ப ராசி நேயர்களே!
மன அமைதியை தரும். இன்று நாள் முழுவதும் ஓரளவு சிறப்பான நாளாக அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் பண இழப்பை தவிர்க்கலாம். வேலை இடத்தில் சக ஊழியர்கள் உதவ முன் வருவார்கள். துணையுடன் அனுசரித்து செல்வீர்கள். இன்று ஆரோக்கியம் சிறப்பானதாக அமையும். உங்கள் அன்பு உரியவர்கள் ஒரு பரிசை கொடுப்பார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முறையில் கவனத்தை செலுத்தி ஆசிரியரின் பாராட்டை பெறுவார். தூரப் பயணம் நன்மையை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
- அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
- சதயம் : உற்சகமான நாள்.
- பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.
மீன ராசி நேயர்களே!
இன்று செய்யும் காரியத்தில் சிறு பதற்றம் உண்டாகும் அதனால் பொறுமையை கடைப்பிடித்து செய்வதன் மூலம் உடல் ஆரோக்கிய மேம்படும். நீண்ட நாள் கவலை தீரும். வேலைக்கு செல்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்வோம் குறைந்த லாபத்தை எதிர்பார்க்கலாம். காதல் திருமணம் கைகூடும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- பூரட்டாதி : கவனம் தேவை.
- உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
- ரேவதி : மன அமைதி.