ஜூன் 28, 2025, சனிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்று அசதியாக உணர்வீர்கள் பணிகளில் சில சில இன்னல்கள் சந்தித்து சமாளிப்பீர்கள்.
வீட்டில் கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
ஆரோக்கியத்திலும் கவனம் தேவை
பொதுவாக இந்த நாள் சற்று அலைச்சலாக உணர்வீர்கள்
பயணங்களால் நன்மை உண்டாகும்.
நீண்ட நாள் நண்பர்களால் மனநிறைவு பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : சிவபெருமான் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- அஸ்வினி : அலைச்சல்
- பரணி : வேலையில் கவனம் தேவை
- கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.
ரிஷப ராசி நேயர்களே!

இன்று உறவினர்களுடன் நேரத்தை செலவு செய்து அவர்களுக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தருவீர்கள்
துணையுடன் நிம்மதியை உணர்வீர்கள்.
பணம் வரவு திருப்தியை தரும்.
இன்று உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவழிதது சந்தோஷத்தை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் 3
- அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
- வழிபட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- கிருத்திகை : இன்பமான நாள்
- ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
- மிருகசீரிஷம் : சன்மானம் உண்டு
மிதுன ராசி நேயர்களே!

வேலை பளு அதிகரிக்கும்.
துணையுடன் அனுசரித்து நடக்கவும்
பனப்பழக்கம் ஓரளவு திருப்தி தரும்
காதல் விவகாரங்களில் கவனம் தேவை
உடல் நலனிலும் அக்கறை தேவை.
கோவத்தை குறைத்துக் கொள்வது அந்த நாளை மன அமைதியுடன் கடக்க உதவும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று விநாயகர் வழிபாடு மன அமைதியை தரும்.
- மிருகசீரிஷம் : முயற்சி தேவை.
- திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை.
- புனர்பூசம் : அமைதியான நாள்.
கடக ராசி நேயர்களே!

வேலையில் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
வேலை வலு குறையும்.
காதல் விவகாரங்களில் ஓரளவு நிதானம் தேவை
துணையுடன் அனுசரித்து செல்வது சிறப்பை தரும்.
உடல் நலனில் அக்கறை தேவை
வரவு செலவு சரியாக இருக்கும் சிக்கனம் தேவை.
இன்று காலை இறைவன் பாட்டுடன் ஆரம்பிப்பது அந்த நாளை சிறப்பானதாக்கும்.
.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழிபட வேண்டிய தெய்வம் :குரு பகவான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்
- பூசம் : மகிழ்ச்சி தரும்
- ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய நாள் முழுவதும் பொறுமை தேவை பண விஷயங்களில் கவனம் தேவை
துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும்
ஆரோக்கியம் மேம்படும் வேலை பளு அதிகமாகும் அதனால் சிறு மனம் அமைதி இழப்பீர்கள்
தூர பயணங்கள் நன்மையே நடக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழிபட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- மகம் : நற்பலன்கள்
- பூரம் : மகிழ்ச்சி நிலவும்
- உத்திரம் : முயற்சி வீண் போகாது
கன்னி ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உற்சாகமாக காணப்படுவீர்கள்
பணியிடத்தில் நல்ல சூழ்நிலைகளை உருவாகும்
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்
வேலைகளில் உங்கள் திறமையை காண்பிப்பீர்கள்
துணையுடன் நல்ல ஒரு சமூகமான உறவு நிலைக்கும்
நிதிநிலைகளில் திருப்தி அளிக்கும்
இன்று ஆரோக்கியமும் மேம்படும்.
.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாகும்.
- உத்திரம் : கௌரவம் உயரும்
- ஹஸ்தம் : இனிமையான நாள் .
- சித்திரை : பதவி உயர்வு கிடைக்கும்
துலாம் ராசி நேயர்களே!

செல்வம் பெருகும்.
துணையுடன் நல்ல அனுசரணை கிடைக்கும்.
பணிச்சுமை குறையும்.
நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும்.
பெற்ற பிள்ளைகளால் மனநிறைவு கிடைக்கும்
பயணத்தால் பயன் பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : ஹனுமன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- சித்திரை : ஆர்வமுடன் செயல்படும் நாள்.
- சுவாதி : மன மகிழ்ச்சி தருகிற நாள்.
- விசாகம் : புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே!

புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.
நண்பர்களால் பயனடைவீர்கள் வரவு செலவுகளில் திருப்தி ஏற்படும்.
துணையுடன் மன நிம்மதி ஏற்படும்.
நீண்ட நாட்களாக கோயிலுக்கு செல்லும் எண்ணம் ஈடேறும்
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழிபட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- விசாகம் : பொறுப்புகள் கூடும்
- அனுஷம் : ஆதாயம் உண்டு. உடல் நலலில் அக்கறை தேவை.
- கேட்டை ; மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு ராசி நேயர்களே!

வேலை தாமதமாக நடந்தாலும் முடிவில் அதை சரியாக நிறைவேற்றுவீர்கள்
பயணங்களால் அனுகூலம் உண்டு.
யாரிடமும் உங்களுடைய ரகசியங்களை சொல்ல வேண்டாம்.
அது தேவையில்லாத பிரச்சினைகளை பின்னாலில் உருவாக்கும்.
பண வரவுகளில் ஓரளவு திருப்தி இருக்கும்.
துணையுடன் அனுசரித்து போவது நல்லது
உடல் நலனில் சிறிய சோர்வுகள் ஏற்பட்டு பின்பு நிவர்த்தி அடையும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : தக்ஷிணாமூர்த்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- மூலம் : அனுசரித்து செல்வது நல்லது
- பூராடம் ; விவேகமாக இருக்க வேண்டும்
- உத்திராடம் : உத்தியோகத்தில் மாற்றங்கள் தேவை
மகர ராசி நேயர்களே!

சுயநலத்தை தவித்தீர்கள் என்றால் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேற்றம் அடையலாம்
துணையுடன் அனுசரிக்கவும்.
உடல் நலனில் அக்கறை தேவை.
வரவு செலவுகளில் திருப்திகரமாக இருக்கும்.
மூத்தோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்.
நெல்லிக்கனியை போன்றது போல மூத்தோர்களின் சொல்லை கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பு அமையும்.
பழைய நண்பர்களை சந்தித்து குதுகளிப்பீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : சனிபகவான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்
- உத்திராடம் : புதிய வாய்ப்புகள் அமையும்
- திருவோணம் : கடன் குறையும்
- அவிட்டம் : புதிய நண்பர்கள் தேடி வருவார்கள்.
கும்ப ராசி நேயர்களே!

இன்று உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகளை குறைக்கலாம்.
தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
வரவு செலவுகள் தெரிவு திருப்திகரமாக இருக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
உடல் நலனில் அக்கறை தேவை.
சிறு சிறு சங்கடங்கள் வந்து மறையும்.
தொழிலில் சிறப்பான லாபத்தை எதிர்பார்க்கலாம்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : உங்க இஷ்ட தெய்வத்தை வணங்கி இன்றைய நாளை சிறப்பாக இருக்கலாம்
- அவிட்டம் : நிம்மதி தரும் நாள்
- சதயம் : மகிழ்ச்சியான நாள்
- பூரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்
மீன ராசி நேயர்களே!

பணிச்சுமை காரணமாக பொறுப்புகள் கூடும்.
வியாபாரத்தில் சிறிய இலாபத்தை எதிர்பார்க்கலாம்.
துணையுடன் அனுசரித்து போவது நன்மை.
வரவு செலவுகளில் திருப்தி ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்
சேமிப்பு இன்றைய நாளை சிறப்பாக வைக்க உதவும்.
நண்பர்களுடன் பேசி மகிழ்ச்சியடைவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
- வழிபட வேண்டிய தெய்வம் : சூரிய வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாகும்.
- பூரட்டாதி : மன அமைதி கிடைக்கும்.
- உத்திரட்டாதி : புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள்.
- ரேவதி : பிரார்த்தனை நிறைவேறும்.