இன்றைய ராசிபலன் – ஜூலை 21, 2025 (திங்கட்கிழமை)

ஜூலை 21, 2025, திங்கட்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சி தருவதாக அமையும். எல்லா காரியத்திலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றியை அடைவீர்கள். மனக்குழப்பத்திலிருந்து விடுபட இறைவழிபாடு உங்களுக்கு உதவும் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் இன்று வரவு அதிகரிக்கும் இன்று தன்னம்பிக்கையுடன் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும் ஆரோக்கியம் ஓரளவு திருப்தியை தரும்.

ரிஷப ராசி நேயர்களே!

இன்று உங்கள் செயல் திறமையால் வெற்றியை பெறுவீர்கள் சிறு சிறு மன குழப்பங்கள் தடங்கல்கள் இருந்தாலும் அவற்றை உங்கள் மன வலிமையால் வென்று காரிய வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகள் தங்கள் லாபத்தை ஒரளவு பெறுவார்கள். காதல் கைகூடும். நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். துணை உங்களை அனுசரித்து நடப்பார். மாணவர்கள் படிப்பில் நல்ல விதத்தில் கவனத்தை செலுத்துவார்கள். மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பை பெறுவர். உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல உதவிகளை செய்ய முன்வருவார்கள் அவர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே!


இன்று சிறப்பான நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்டு வேலை செய்யும் பொழுது பணிச்சுமைகளை குறைக்கலாம். காதல் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று நாள் முழுவதும் அசதியை உணர்வீர்கள். மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும் இன்று நீங்கள் பல நாள் நினைத்த காரியம் ஒன்று கைகூடும்.
உங்கள் துணை உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் இன்று குழப்பமான சூழ்நிலைகள் இருந்தாலும் ஓரளவு சமாளிக்க கூடிய மன நிலைமையில் இன்று நாள் செல்லும்.

கடக ராசி நேயர்களே!

இன்று இறைவழிபாடு உங்களை மன திருப்தி வைத்திருப்பதற்கு தியானங்கள் மேற்கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் ஓரளவு மட்டுமே இலாபத்தை எதிர்பார்க்க வேண்டும். மேல் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். உறவினர்கள் உதவியை எதிர்பார்க்க வேண்டாம். ஆரோக்கியம் ஓரளவு திருப்தியாக இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களை சற்று நன்மை தரும் நாளாக அமையப் போகிறது. எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலை செய்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உங்கள் துணையுடன் அனுசரித்து சென்றால் இன்றைய நாளை சிறப்பாக மாற்றலாம். வரவு செலவுகளில் பண விஷயங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம். அது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரும் என்று அலைச்சலால் உடல் அசதியும் மனசோர்வும் காணப்படும். இறைவழிபாடு இன்றைய நாளை மன அமைதி உடன் வைத்திருக்க உதவும் மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

.

கன்னி ராசி நேயர்களே!

இன்றைய நாள் யோகங்கள் நிறைந்த நாளாக அமையப்போகிறது.
தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை கையாளுவீர்கள். மன நிறைவு ஏற்படும் குடும்பத்தில் துணையுடன் அனுசரித்து நடக்கவும். மாணவர்கள் நல்ல முறையில் இன்று படித்து நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் புதிய ஆடம்பரமான பொருள்களை வாங்க முயற்சி செய்வீர்கள் உடல்நலனில் அக்கறை தேவை.

துலாம் ராசி நேயர்களே!

இன்றைய இந்த ராசியினருக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் வீடு வாகனங்கள் மதிப்புள்ள பொருள்களை வாங்குவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள். வியாபாரத்தில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள் உங்கள் மேல் அதிகாரிகள் கௌரவமாக நடத்துவார். மொத்தத்தில் நன்மை உண்டாகும் நாள்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்று பணவரவுக்கு குறைவிருக்காது அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக காணப்படும் வேலையில் சக ஊழியர்களின் மதிப்பை பெறுவீர்கள்.
மேலதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள் இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் வெளிநாட்டுக்கு முயற்சி செய்யலாம்.
புதிய முயற்சிகள் நன்மையை தரும்.
திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றியை அடையலாம்.
ஆரோக்கிய மேம்படும்.

தனுசு ராசி நேயர்களே!

இன்று வெளியூர் பயணங்கள் நன்மையை தரும் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
இன்று ஓரளவு மன நிம்மதியை உணர்வீர்கள் பணி செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது துணையுடன் அனுசரித்து செல்லுங்கள். காதல் விவகாரங்கள் வெற்றி தரும். இன்று பொறுமை காப்பது நல்லது என்று அலைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் இறை வழிபாடு இன்று மன அமைதியை கொடுக்கும் தியானம் மேற்கொள்ளுங்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.

மகர ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் ஓரளவு திருப்தி தரும் நாளாக அமையும்.
இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள் வேலையில் இடத்தில் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் சிறு சிறு கவனச் சிதறல்கள் ஏற்படும் என்று புதிய வாய்ப்புகளை புதிய பதவிகளை பெறுவீர்கள் தேவையில்லாத பிரச்சினைகள் இருந்து விலகி இருப்பது சிறப்பு இன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பான பலனை தரும் வரவு கெட்ட செலவுகள் இருக்கும் பல விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். புதிய சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே!

இன்று நீண்ட நாள் திட்டம் ஒன்று நடைமுறைக்கு வரும் பொதுவாக இந்த நாளில் பொறுமையுடன் இருப்பது நன்மையை தரும் பல இக்கட்டான சூழ்நிலைகளையும் சவால்களையும் சந்திப்பீர்கள் இறுதியில் நன்மையில் முடியும் கவலை வேண்டாம் வியாபாரத்தில் புது முயற்சிகள் ஏற்படும் ஆனால் அவற்றை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது ஆரோக்கியத்தில் கவனம் தேவை முதுகில் வலி வந்து மறையும் மாணவர்கள் முயற்சிகளை அதிகமாக செலுத்த வேண்டும் கணவன் மனைவியிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள் தியானங்களை மேற்கொள்ளுங்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மீன ராசி நேயர்களே!

இன்று எல்லா விஷயங்களிலும் மழை நிறைவை பெறுவீர்கள்.இன்று அதிர்ஷ்டங்களை பெறப்போகும் நாள்.
வியாபாரத்தில் பெரிய அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். தொழில் விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும் புதிய புதிய வாடிக்கையாளரை பெறுவீர்கள் வாழ்க்கை துணையுடன் வின் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் இதனால் மன அமைதி குறையும் உடல் நலனில் அக்கறை தேவை என்று மன அமைதி குறைவதால் தியானங்களை மேற்கொள்ளலாம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய நாள். வெளிநாட்டு செய்தி நன்மையை தரும்.

Exit mobile version