ஜூலை 12, 2025, சனிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும்
மனம் அலைபாயும் பொறுப்புக்கள் மென்மேலும் கூடும் வேலை செய்யும் இடத்தில் வேலை சற்று கடினமாக தோன்றலாம்
வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும்
உங்கள் துணையுடன் சிறு சிறு மனச்சலனம் ஏற்பட்டு மறையும்
பண தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் இருப்பதை வைத்து அனுசரித்து நடந்தால் கடனில் இருந்து விடுபடலாம்.
திருமணம் சம்பந்தமான நல்ல விஷயங்கள் நடைபெறும்.
காதல் திருமணம் கைகூடும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை கவன சிதறல்கள் ஏற்படும்
வெளிநாடு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- அஸ்வினி : அலைச்சல்
- பரணி : வேலையில் கவனம் தேவை
- கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.
ரிஷப ராசி நேயர்களே!

இந்த நாள் மிகச் சிறப்பாக அமையும்
புதிய ஆடம்பரமான செலவுகள் ஏற்படும்
வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
தூரத்து பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வருமானம் நிறைவாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி செல்வீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- கிருத்திகை : இன்பமான நாள்
- ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
- மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்
மிதுன ராசி நேயர்களே!

இன்றைய நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள்
புதிய நட்பு வட்டாரங்கள் பெருகும்.
வீண் பேச்சுக்களை குறைத்து வேலையில் கவனம் செலுத்தும் பொழுதும் தேவையில்லாத பிரச்சினைகளை குறைக்கலாம்.
குடும்பத்தில் அமைதி ஏற்படும்
வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம்
மாணவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் நாள்.
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்
இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக அமையும்.
- அதிஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மிருகசீரிஷம் : முயற்சி
- திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
- புனர்பூசம் : அமைதியான நாள்
கடக ராசி நேயர்களே!

இந்த நாள் மிகவும் சிறப்பான நாளாக அமைய உள்ளது
தொட்டதெல்லாம் வெற்றி உண்டாகும் நாள்.
வீடு வாங்க முயற்சி செய்வீர்கள்
பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கல்யாணம் கைகூடும் மகிழ்ச்சி பெருகும்
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்
துணையுடன் வாக்குவாதத்தில் ஏற்பட வேண்டாம்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை மேற்கொண்டு மதிப்பெண்களை பெறவார்கள்.
இன்று ஓரளவு சிறப்பான நாளாக அமையும்.
வியாபாரத்தில் இன்று ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
வெளிநாட்டு செய்தி குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணும்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மெருன்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்
- பூசம் : மகிழ்ச்சி தரும்
- ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய இந்த ராசியினருக்கு மகிழ்ச்சியாகமான நாளாக அமையும்
எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள்
வீடு வாகனங்கள் மதிப்புள்ள பொருள்களை வாங்குவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள்
வியாபாரத்தில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும்
வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
உங்கள் மேல் அதிகாரிகள் கௌரவமாக நடத்துவார்.
மொத்தத்தில் நன்மை உண்டாகும் நாள்.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மகம் : மன நிம்மதி
- பூரம் : மகிழ்ச்சி
- உத்திரம் : உற்சாகமான நாள்
கன்னி ராசி நேயர்களே!

இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையப்போகிறது
பண விஷயத்தில் திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்கள் இன்று கவனமுடன் படிப்பார்கள்.
இன்று நன்மைகள் ஏற்படும் நாள்
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும்.
உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்
திருமண தகவல்கள் வந்து சேரும்
வெளிநாட்டு வேலைகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
- ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
- சித்திரை : ஆதாயம் கிடைக்கும்
துலாம் ராசி நேயர்களே!

இன்று பணவரவுக்கு குறைவிருக்காது
அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக காணப்படும்
வேலையில் சக ஊழியர்களின் மதிப்பை பெறுவீர்கள்.
மேலதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள்
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
வெளிநாட்டுக்கு முயற்சி செய்யலாம்.
ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
- சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
- விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்
விருச்சிக ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் ஓரளவு திருப்தி தரும் நாளாக அமையும்.
இன்று நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள்
வேலை இடத்தில் பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். சிறு சிறு கவனச் சிதறல்கள் ஏற்படும்
இன்று புதிய வாய்ப்புகளை புதிய பதவிகளை பெறுவீர்கள்
தேவையில்லாத பிரச்சினைகள் இருந்து விலகி இருப்பது சிறப்பு
இன்று தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பான பலனை தரும்
வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும்.
பண விஷயத்தில் கவனம் தேவை.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
புதிய சொத்துக்கள் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
- விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
- அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
- கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!

இன்று நாளில் புது முயற்சிகள் வெற்றி தரும்
புதிய வியாபாரத்தை மேற்கொள்வீர்கள்
நல்ல பேரும் புகழும் உண்டாகும்
வெளிநாட்டுகளிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்
திருமணம் கைகூடும்.
காதல் திருமணம் கைகூடும்.
இன்று நன்மைகள் நிறைந்த நாளாக அமையும்
மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் படிப்பது நல்லது
கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.
தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- மூலம் : அலைச்சல்
- பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
மகர ராசி நேயர்களே!

இன்று கடின முயற்சிக்குப் பிறகு வெற்றியை காண்பீர்கள்
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம்.
பண விஷயங்களில் நிறைவை காண்பீர்கள்.
பெற்றோரின் உடல்நிலை அக்கறை தேவை.
இன்று வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் வேலை செய்ய வேண்டும் இதனால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாகும் அது மனதளவில் சோர்வு உண்டாகும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை
பயணங்களில் இன்று பெரும் லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம்.
துணையோடு மகிழ்ச்சியை பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
- திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
- அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.
கும்ப ராசி நேயர்களே!

இன்று எல்லா விஷயங்களிலும் மன நிறைவை பெறுவீர்கள்.
இன்று அதிர்ஷ்டங்களை பெறப்போகும் நாள்.
வியாபாரத்தில் பெரிய அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள்.
தொழில் விஷயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டாகும்
புதிய புதிய வாடிக்கையாளரை பெறுவீர்கள்
வாழ்க்கை துணையுடன் சண்டை சச்சரவுகளை தவிர்க்கவும் இதனால் மன அமைதி குறையும்
உடல் நலனில் அக்கறை தேவை
இன்று மன அமைதி குறைவதால் தியானங்களை மேற்கொள்ளலாம்.
மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய நாள்.
வெளிநாட்டு செய்தி நன்மையை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
- அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
- சதயம் : உற்சகமான நாள்.
- பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.
மீன ராசி நேயர்களே!

இன்றைய நாள் யோகங்கள் நிறைந்த நாளாக அமையப்போகிறது.
தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும்
வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை கையாளுவீர்கள்.
மன நிறைவு ஏற்படும்.
குடும்பத்தில் துணையுடன் அனுசரித்து நடக்கவும்
மாணவர்கள் நல்ல முறையில் படித்து நன்மதிப்பை பெறுவீர்கள்
புதிய சொத்துக்கள் புதிய ஆடம்பரமான பொருள்களை வாங்க முயற்சி செய்வீர்கள்
உடல்நலனில் அக்கறை தேவை.
- அதிஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- பூரட்டாதி : கவனம் தேவை.
- உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
- ரேவதி : மன அமைதி.