இன்றைய ராசிபலன் – ஜூலை 11, 2025 (வெள்ளிக்கிழமை)

ஜூலை 11, 2025, வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சி தருவதாக அமையும்.
எல்லா காரியத்திலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றியை அடைவீர்கள்
மனக்குழப்பத்திலிருந்து விடுபட இறைவழிபாடு உங்களுக்கு உதவும்
துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்
மாணவர்கள் ஓரளவு படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்
இன்று வரவுக்கு மேல் செலவும் காணப்படும்
இன்று தன்னம்பிக்கையுடன் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சிகள் ஏற்படும்.
ஆரோக்கியம் ஓரளவு திருப்தியை தரும்

ரிஷப ராசி நேயர்களே!

இன்றைய நாள் உங்களை சற்று அலைக்கழிக்கும் நாளாக அமையப் போகிறது
கவனமுடன் இந்த நாளை பொறுமையுடன் கடக்க வேண்டும்
எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது
வேலை செய்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது
உங்கள் துணையுடன் அனுசரித்து சென்றால் இன்றைய நாளை சிறப்பாக மாற்றலாம்
வரவு செலவுகளில் பண விஷயங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம்
அது தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வரும்
இன்று அலைச்சலால் உடல் அசதியும் மனசோர்வும் காணப்படும்
இறைவழிபாடு இன்றைய நாளை மன அமைதி உடன் வைத்திருக்க உதவும்.
மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

மிதுன ராசி நேயர்களே!


சிறிது காலமாகவே உங்களுக்கு அலைச்சல் மிகுந்ததாகவும், பணிச்சுமையை காரணமாகவும் மன குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கிறது.
அவற்றை இறைவழிபாடு மூலம் மாற்றுங்கள்.
பணிகளை திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவர்கள்
உங்கள் மேல் அதிகாரியின் கவனத்தை உங்கள் பணியின் மூலம் ஈர்ப்பீர்கள்.
இன்று உங்கள் துணை உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை புரிந்து நடப்பீர்கள்
மாணவர்கள் படிப்பில் தொடர்ந்து கவனத்தை செலுத்துவது நன்மையை தரும்
வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்
பண விஷயங்களில் திருப்தியை தரும்
உங்கள் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

கடக ராசி நேயர்களே!

இன்று உங்கள் செயல் திறனாள் வெற்றியை பெறுவீர்கள்
சிறு சிறு மன குழப்பங்கள் தடங்கல்கள் இருந்தாலும் அவற்றை உங்கள் மன வலிமையால் வென்று காரிய வெற்றி பெறுவீர்கள்
வியாபாரிகள் தங்கள் லாபத்தை பெறுவார்கள்
காதல் கைகூடும்.
இந்த நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
துணை உங்களை அனுசரித்து நடப்பார்
மாணவர்கள் படிப்பில் நல்ல விதத்தில் கவனத்தை செலுத்துவார்கள்
மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பை பெறுவர்.
உறவினர்கள் நீங்கள் எதிர்பார்த்ததைப் போல உதவிகளை செய்ய முன்வருவார்கள்

சிம்ம ராசி நேயர்களே!

இன்றைய நாளை பொறுமையுடனும் கவனமுடனும் செலுத்த வேண்டிய நாள்
இறைவழிபாடு உங்கள் இன்றைய நாளை அமைதியுடன் கடக்க உதவும்.
தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்
மன அமைதியுடனும் பொறுமையை கடைப்பிடித்தால் வெற்றி பெறுவீர்கள்
மாணவர்களுக்கு சற்று கவன குறைவு ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
வெளிநாட்டு செய்தி நீங்கள் எதிர்பார்த்ததை தாமதமாக்கும்.
பணவரவு ஓரளவு திருப்தியை தரும்
கொடுக்கல் வாங்கலில் தலையிட வேண்டாம்
வியாபாரிகள் கடின உழைப்புக்கு பின் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்
துணையுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்

கன்னி ராசி நேயர்களே!

பல தடைகளுக்குப் பின் வெற்றியை பெறுவீர்கள் பொறுமை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை
தியானத்தை மேற்கொள்வது மன அமைதியைத் தரும்
வேலை செய்யும் இடத்தில் அமைதியை பொறுமையையும் கடைபிடிப்பது நல்லது.
வரவு செலவு சம அளவில் இருக்கும்
துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்
ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்

துலாம் ராசி நேயர்களே!

தொடர்ந்து சில நாட்களாக சாதனைகளைப் படைத்துவரும் துலா ராசி நேயர்களே
இன்று நாள் முழுவதும் மன அமைதியையும் தன்னம்பிக்கையும் பெறுவீர்கள்
தொட்டது தொடங்கும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்
மனைவி கணவன் இருவரும் அனுசரித்து ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பர்
மாணவர்கள் ஆசிரியரிடம் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பெறுவார்கள்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஏற்படும்
வேறு ஒரு புதிய தொழிலை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள்
விலை உயர்ந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்
உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள்
மொத்தத்தில் மகிழ்ச்சியை தரும் நாள்.

விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு உங்களுக்கு திருப்திகரமான நாளாக அமையும்
கடின உழைப்பிற்கு பின் வெற்றியை பெறுவீர்கள்
முயற்சிகள் பலன் தரும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவீர்கள் இதனால் மதிப்பெண்கள் உயரும்
வியாபாரத்தில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்
புதிய சொத்துக்கள் சேர்க்க வாய்ப்புகள் உருவாகும்
கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிகளை எடுப்பீர்கள்
தூரத்து பயணங்கள் நன்மையை தரும்
வெளிநாட்டு செய்தி ஒன்று தேடி வரும்
ஆரோக்கியத்தில் திருப்தி தரும்
பண விஷயங்களில் தாராளமான சூழ்நிலை காணப்படும்.

தனுசு ராசி நேயர்களே!

வீட்டில் உள்ளவரிடம் அனுசரித்து நடக்கவும்
வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி லாபத்தை ஈட்ட முயற்சிப்பீர்கள்
அரசுப் பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்
பணம் ஓரளவு திருப்தியை தரும்.
கணவன் மனைவியிடையே சிறு மன கசப்புக்கள் ஏற்பட்டு மறையும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
யாரை நம்பியும் கையெழுத்து இட வேண்டாம்
இன்று இறைவழிபாடு நன்மையும் மன அமைதியும் தரும்.

மகர ராசி நேயர்களே!

இன்று நீண்ட நாள் திட்டம் ஒன்று நடைமுறைக்கு வரும்
பொதுவாக இந்த நாளில் பொறுமையுடன் இருப்பது நன்மையை தரும்
பல இக்கட்டான சூழ்நிலைகளையும் சவால்களையும் சந்திப்பீர்கள் இறுதியில் நன்மையில் முடியும்.
கவலை வேண்டாம் வியாபாரத்தில் புது முயற்சிகள் ஏற்படும் ஆனால் அவற்றை சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை முதுகில் வலி வந்து மறையும்
மாணவர்கள் முயற்சிகளை அதிகமாக செலுத்த வேண்டும்
கணவன் மனைவியிடையே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்
தியானங்களை மேற்கொள்ளுங்கள்.
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கும்ப ராசி நேயர்களே!

இன்றைய நாள் முழுவதும் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்
புதிய முயற்சிகள் வெற்றிகளை கொடுக்கும்
சக ஊழியர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்
ஆசிரியர்களிடம் மாணவர்கள் நல் மதிப்பை பெறுவார்கள்
தொட்டது துலங்கும் நாள் வியாபாரம் செய்ய முயற்சிப்பீர்கள் அது வெற்றியை கொடுக்கும்
கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பார்கள்
பண வரவு நல்ல திருப்தியை தரும்
புதிய சொத்துக்கள் வாங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள்
வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் இதனால் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாள்.
புதிய தொழில்களை முயற்சிப்பீர்கள் அதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள்
கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
வேலை செய்யும் இடத்தில் வேலைகளை விரைவாக முடிப்பீர்கள்
ஆரோக்கியம் திருப்தியை தரும்
வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வரும்
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
மொத்தத்தில் இன்றைய நாள் சிறப்பான நாளாக உள்ளது.

Exit mobile version