ஆகஸ்ட் 10, 2025, ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார், ‘தத்புருஷ சிவ. சண்முகபிரியா, ஸ்ரீ காமாட்சி ஜோதிடம் & ஆராய்ச்சி மையம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்று பொறுமையுடன் இருக்க வேண்டும் மனம் அலைபாயும் பொறுப்புக்கள் மென்மேலும் கூடும் வேலை செய்யும் இடத்தில் வேலை சற்று கடினமாக தோன்றலாம் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்ய வேண்டும் உங்கள் துணையுடன் சிறு சிறு மனச்சலனம் ஏற்பட்டு மறையும்
பண தேவைகள் அதிகமாக இருப்பதால் கடன் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் இருப்பதை வைத்து அனுசரித்து நடந்தால் கடனில் இருந்து விடுபடலாம். திருமணம் சம்பந்தமான நல்ல விஷயங்கள் நடைபெறும்.
காதல் திருமணம் கைகூடும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை கவன சிதறல்கள் ஏற்படும்
வெளிநாடு வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
ரிஷப ராசி நேயர்களே!

இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் எடுக்கும் முயற்சிகள் அத்தனையும் வெற்றி பெறும் பண விஷயங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை தர வேண்டாம். கணவன் மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பார்கள் வீட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள் வியாபாரம் மேலும் புதிய தொழில்கள் முயற்சிக்க நல்ல நாளாக அமையும் நட்பு வட்டாரம் பெருகும் புதிய ஆலோசனைகளை ஏற்பீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
மிதுன ராசி நேயர்களே!

வேலையில் அதிக அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படும் ஆனாலும் சமாளித்து முன்னுக்கு வருவீர்கள் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள்.
கூட்டுத் தொழில் வேண்டாம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள் தேவையற்ற பண இழப்புகளை தவிர்க்கலாம் தனிப்பட்ட முறையில் பணவரவுகள் உங்கள் கல்லாவை நிரப்பும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கால் வலி வந்து மறையும் மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் படிக்க வேண்டும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடப்பர்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கும் வேலை வலுவும் மன உளைச்சலும் அதிகமாக காணப்படும் தேவையற்ற வாக்குவாதங்களை சக ஊழியர் காட்ட வேண்டாம். வீணான விவாதங்களில் கொண்டு போய்விடும் பண வரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட சற்று குறைவானதாக காணப்படும் காதல் விஷயங்களில் அவசரம் வேண்டாம் வியாபாரத்தில் அக்கறையும் கவனமும் தேவை புதிய முயற்சிகளை தள்ளிப் போடலாம். கணவன் மனைவியே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

ஒரளவு மன அமைதி தரும் நாளாக அமையும்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம் பொறுப்புகள் கூடுவதால்
செலவுகளும் அதிகரிக்கும். மனதில் சில குழப்பங்கள் ஏற்படும் துணையுடன் சிறு சிறு மன குழப்பங்கள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. உடலில் வலி ஏற்படும்.
தொழிலில் குழப்பங்கள் இருந்தாலும் மிதமான லாபம் அடையலாம். கடன் விவகாரங்களில் இழுப்பறி நிலவும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

உங்களுக்கு சாதகமான நாளாக அமையப் போகிறது நீங்கள் நினைத்த காரியங்கள் என்று நடக்கும் நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும் வேலையில் பொறுப்புடன் இருப்பீர்கள் இதனால் மேல் அதிகாரி உங்களை பாராட்டுவார். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வேலையில் புதிய வாய்ப்புகளை தேடுவீர்கள் அது சாதகமாக அமையும் வெளிநாட்டில் வேலை தேடுபவருக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் இன்று நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் துணையுடன் அனுசரித்து புரிந்து நடப்பீர்கள் தரும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

இன்று ஓரளவு சிறப்பான நாளாக அமையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியை பெறுவீர்கள் தூரத்து பயணங்கள் நன்மையை தரும் பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை எதிர்பார்க்கலாம் மாணவர்கள் படிப்பில் கவனமாக செலுத்த நல்லது கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சினை ஏற்படும் இன்று மகிழ்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியத்தில் குறைவிருக்காது. புதிய முயற்சி செய்யுங்கள் வெற்றி அடையும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

இன்று பணவரவுக்கு குறைவிருக்காது அதிர்ஷ்டங்கள் நிறைந்த நாளாக காணப்படும் வேலையில் சக ஊழியர்களின் மதிப்பை பெறுவீர்கள். மேலதிகாரிகளால் நன்மை பெறுவீர்கள் இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் வெளிநாட்டுக்கு முயற்சி செய்யலாம்.
புதிய முயற்சிகள் நன்மையை தரும். திட்டமிட்டு செய்வதன் மூலம் வெற்றியை அடையலாம்
ஆரோக்கியம் மேம்படும்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

இன்று வெளியூர் பயணங்கள் நன்மையை தரும் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
இன்று ஓரளவு மன நிம்மதியை உணர்வீர்கள் பணி செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது துணையுடன் அனுசரித்து செல்லுங்கள் காதல் விவகாரங்கள் வெற்றி தரும் இன்று பொறுமை காப்பது நல்லது என்று அலைச்சல் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும் இறை வழிபாடு இன்று மன அமைதியை கொடுக்கும் தியானம் மேற்கொள்ளுங்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

புதியவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். வரவு செலவுகளில் இழு பரிக் குறையும்.
அன்றாட வேலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் அது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்.
இன்று அரசாங்கத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று புதிய வாய்ப்புகள்.
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

புதிய முயற்சிக்கான செயல்களை செய்து இன்றைய நாளை சிறப்பாகலாம் இன்று சற்று மன நிம்மதியை தரும் நாளாக இருக்கும் பணிகளின் மேல் அதிகாரிகள் உங்கள் கவனத்தை ஈர்ப்பீர்கள் உங்கள் துணையால் நன்மதிப்பு ஏற்படும். இன்று இறை வழிபாடு மன அமைதியை தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும் பண விஷயங்களில் ஓரளவு திருப்தியை தரும் வெளியூர் பயணங்கள் நன்மைகளை தரும்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக்கும்.
மீன ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாள். புதிய தொழில்களை முயற்சிப்பீர்கள் அதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள் கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வீர்கள் மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும் வேலை செய்யும் இடத்தில் வேலைகளை விரைவாக முடிப்பீர்கள் ஆரோக்கியம் திருப்தியை தரும் வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வரும் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மனதில் தன்னம்பிக்கை ஏற்படும் மொத்தத்தில் இன்றைய நாள் சிறப்பான நாளாக உள்ளது.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.