ஜூலை 10, 2025, வியாழக்கிழமைக்கான ராசிபலன்கள்.
உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி நேயர்களே!

இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாக அமையும்.
பண வரவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
கவனத்தை உழைப்பில் செலுத்தினால் மனக்கவலைகள் தீரும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
வியாபாரிகள் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம்
அரசு பணியாளர்கள் மேல் அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
இறைவழிபாடு செலுத்தி இன்றைய நாளை சிறப்பாக்குங்கள்
- அதிஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக்கும்.
- அஸ்வினி : அலைச்சல்
- பரணி : வேலையில் கவனம் தேவை
- கிருத்திகை : ஆதாயம் பெறும் நாள்.
ரிஷப ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் இருப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.
வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது
சக ஊழியர்கள் உங்களிடம் தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடலாம்.
கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுப்பது நல்லது
ஆரோக்கியத்திலும் கவனம் தேவை தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது பண விரயத்தை தவிர்க்கும்
மாணவர்கள் கண்டிப்பாக படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
தூரத்து பயணம் நன்மையை தரும்
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்டமான நிறம் : ரோஸ்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- கிருத்திகை : இன்பமான நாள்
- ரோகிணி : மகிழ்ச்சி உண்டாகும்
- மிருகசீரிஷம் : சன்மானம் உண்டாகும்
மிதுன ராசி நேயர்களே!

இன்று ஓரளவு திருப்திகரமான நாளாக அமையப் போகிறது
வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் அது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்.
வேலையை குறித்து நேரத்தில் முடித்து மேல் அதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்
தொழில் செய்வோர் இன்று ஓரளவு நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்
வாழ்க்கைத் துணையுடன் அன்பாக பேசுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படும்
இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
மாணவர்கள் படிப்பை நல்ல முறையில் படிப்பார்கள்.
நீண்ட நீண்டகால நண்பர்களை சந்திப்பீர்கள் இன்று பல விஷயங்களில் வள்ளல் லாபத்தை எதிர்பார்க்கலாம்
சொத்துக்களை வாங்க யோசனை செய்வீர்கள்.
- அதிஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று பெருமாள் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மிருகசீரிஷம் : முயற்சி
- திருவாதிரை : பேச்சில் கவனம் தேவை
- புனர்பூசம் : அமைதியான நாள்
கடக ராசி நேயர்களே!

இன்று ஓரளவு திருப்தி நாளாக அமையப்போகிறது
உங்களுடைய மேல் அதிகாரி உங்களை பாராட்டுவார்
வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும்
வரவு செலவுகளில் சற்று கவனமாக இருப்பது வீண் விரயத்தை தவிர்க்கும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே ஒரு நல்ல சுமுகமான சூழ்நிலை உருவாகும் அன்னோன்யம் மேம்படும்.
இன்று இறைவழிபாடு மனநிறைவைத் தரும்
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்.
- புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்
- பூசம் : மகிழ்ச்சி தரும்
- ஆயில்யம் : ஆதாயம் அடைவீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் பொறுமையை கையாள்வது தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கும்
பணியிடத்தில் சக ஊழியர்கள் தங்களை கணம் பார்ப்பார்கள் அவர்களின் எதிர்மறை செயல்களுக்கு அமைதியை காத்திடுங்கள்
இன்று கடின உழைப்பு தேவைப்படும் நாள்
கணவன் மனைவி இடையே அன்னோன்யம் மேம்படும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
தொழிலில் ஓரளவு லாபத்தை எதிர்பார்க்கலாம் அதற்கு அதிக உழைப்பு செய்ய வேண்டிய நாளாக அமையும்.
பண விஷயங்களில் வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டாம்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழிபட வேண்டிய தெய்வம் : இன்று சூரிய வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
- மகம் : மன நிம்மதி
- பூரம் : மகிழ்ச்சி
- உத்திரம் : உற்சாகமான நாள்
கன்னி ராசி நேயர்களே!

இன்று சிறப்பான நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்டு வேலை செய்யும் பொழுது பணிச்சுமைகளை குறைக்கலாம்
காதல் கைகூடும்
பல விஷயங்களில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை
இன்று நாள் முழுவதும் அசதியை உணர்வீர்கள்
மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும்
இன்று நீங்கள் பல நாள் நினைத்த காரியம் ஒன்று கைகூடும்.
உங்கள் துணை உங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள்
இன்று குழப்பமான சூழ்நிலைகள் இருந்தாலும் ஓரளவு சமாளிக்கக்கூடிய மனநிலைமையில் இன்று நாள் செல்லும்
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : இன்று மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- உத்திரம் : எடுத்த காரியம் நிறைவேறும்
- ஹஸ்தம் : மகிழ்ச்சி நிலவும்
- சித்திரை : ஆதாயம் கிடைக்கும்
துலாம் ராசி நேயர்களே!

இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையப்போகிறது
உங்கள் எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றத்திற்கான அடியை எடுத்து வைப்பீர்கள்
துணை உங்களை நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள்
மாணவர்கள் படிப்பில் நல்ல கவனத்தை செலுத்தி ஆசிரியரிடம் நன் மதிப்பை பெறுவார்கள்.
பல விஷயங்களில் திருப்தி ஏற்படும்
சொத்துக்கள் வாங்குவீர்கள்
இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.
விலை உயர்ந்த பொருள்கள் வீடு தேடி வரும்
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- சித்திரை : மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
- சுவாதி : புதிய வாய்ப்புகள் தேடி வரும். விசாகம் : காரியம் வெற்றி அடையும்.
- விசாகம் : ஓரளவு ஆதாயமான நாள்
விருச்சிக ராசி நேயர்களே!

இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையப்போகிறது
வாழ்வில் சிறந்த முன்னேற்றத்திற்கு அடி எடுத்து வைக்கும் நாளாக அமையப் போகிறது
நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்
மேல் அதிகாரிகள் உங்களை கௌரவமாகவும் மதிப்புடனும் நடத்துவார்கள்
இன்று நாள் முழுவதும் அமைதியான சூழ்நிலையை உணர்வீர்கள்
காதல் கைகூடும்.
திடீர் பண விரயங்கள் உண்டாகும் ஆனாலும் சமாளிப்பீர்கள்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும்.
தூரப் பயணங்களால் நல்ல செய்தி கிடைக்கும்
உறவுகள் உதவிக்கரம் நீட்டுவார்கள்
விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
- வழி பட வேண்டிய தெய்வம் : முருகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்
- விசாகம் : வியாபாரத்தில் திருப்தி.
- அனுஷம் : நினைத்ததை அடைவீர்கள்.
- கேட்டை : சொத்துக்கள் சேர்ப்பீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சில மன குழப்பங்கள் ஏற்படும் இதனால் மன நிம்மதி குறையும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது
மாணவர்களுக்கு கவன சிதறல்கள் உண்டாகும் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
பல விஷயங்களில் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற வேண்டாம்
துணையுடன் அனுசரித்து செல்லுங்கள் இது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கும்
வேலை செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது
மேலதிகாரியுடன் காட்டமான போக்கை தவிர்க்க வேண்டும்
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : சிவன் பெருமான் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
- மூலம் : அலைச்சல் பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- பூராடம் : பொறுமை உத்திராடம் : நிம்மதி
- உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
மகர ராசி நேயர்களே!

இன்று வெளியூர் பயணங்கள் நன்மையை தரும்
உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
இன்று ஓரளவு மன நிம்மதியை உணர்வீர்கள்
பணி செய்யும் இடத்தில் கவனமுடன் இருப்பது நல்லது
துணையுடன் அனுசரித்து செல்லுங்கள்
காதல் விவகாரங்கள் தோல்வியில் முடியலாம்.
இன்று பொறுமை காப்பது நல்லது
இன்று அலைச்சலின் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்
இறை வழிபாடு இன்று மன அமைதியை கொடுக்கும்
தியானம் மேற்கொள்ளுங்கள்
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- உத்திராடம் : மகிழ்ச்சி பொங்கும்.
- திருவோணம் : அதிர்ஷ்டமான நாள்.
- அவிட்டம் : நிம்மதி உணர்வீர்கள்.
கும்ப ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் சுப காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை பெருக்குவீர்கள் இதனால் இன்று நாள் முழுவதும் உற்சாகம் காணப்படும்
துணையுடன் நல்ல சுமுகமான சூழ்நிலை உருவாகும்
இன்று மகிழ்ச்சிக்கு குறைவிருக்காதது.
பணம் பல வழிகளில் வந்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யும்
ஆரோக்கியம் மேம்படும்
உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்தி ஆசிரியரின் பாராட்டை பெறுவார்கள்
மேலதிகாரி உங்களை பாராட்டுவார் கௌரவிப்பார்.
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக இருக்கும்.
எதிர்காலத்திற்கு சேமிப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்
- அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
- சதயம் : உற்சகமான நாள்.
- பூரட்டாதி : நினைத்ததை சாதிப்பீர்கள்.
மீன ராசி நேயர்களே!

இன்று நாள் முழுவதும் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் நாளாக அமையும்
தெய்வ நம்பிக்கை உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும்
காதல் கைகூடும்.
மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பார்கள்
இன்று பல விஷயங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட திருப்தியை தரும்
விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள்.
ஆரோக்கியம் மேம்படும்.
கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்.
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
- வழி பட வேண்டிய தெய்வம் : அம்பிகை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
- பூரட்டாதி : கவனம் தேவை.
- உத்திரட்டாதி : உரிமை கடைபிடிக்க வேண்டும்
- ரேவதி : மன அமைதி.
















