இன்றைய ராசிபலன் – செப்டம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

ஸ்ரீ விசுவாவசு ஆவணி மாதம் 26 ஆம் தேதி
செப்டம்பர் 11, 2025 வியாழக்கிழமை, இன்றைய நட்சத்திரம் – அஸ்வினி நட்சத்திரம்

நல்ல நேரம் : காலை 10:45 முதல் 11.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மதியம் 01.30 மணி முதல் 03.00 pm வரை
எமகண்டம் : காலை 06.00 முதல் 07:30 மணி வரை
குளிகை நேரம் : காலை 10:30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் போன்றவற்றை சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தருகிறார், ஜோதிடர் T. J சுந்தரபாண்டி அவர்கள்.

மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியில் பயணம் செய்கிறார் ஒரு இடத்தில் இருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் அதிக இடங்கள் சென்று வேலை பார்க்க நேரிடும் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது இரண்டு முறை அல்லது மூன்று முறை ஒவ்வொரு விஷயங்களையும் சிந்தித்து முடிவெடுப்பீர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களை நல்ல மாற்றம் உண்டு கடன் பிரச்சினை இருந்து விடுபட வாய்ப்புகள் உள்ளது புதிய கடன்கள் வாங்காமல் இருப்பது நல்லது நண்பர்கள் மூலமாக நல்ல முன்னேற்றம் உண்டு புதிய நண்பர்கள் உருவாவார்கள் பெண்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி பெறுவதற்கான சிறப்பான நாள் மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெறுவார்கள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு.

ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் குடும்ப பெண்களுக்கு குடும்பத்தில் அதிக பொறுப்புகள் கொடுக்கப்படும் அதன் மூலமாக உங்களுடைய ஆளுமை திறமையை இன்று நியமிக்க முடியும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படக்கூடிய நாள் பொதுவாகவே நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் செயல்பாடுகளையும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும் புதிய நபர்கள் யாரேனும் உங்களுக்கு வாய்ப்புகளோ அல்லது ஐடியாவோ கொடுத்தால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது நல்லது உங்களை விட வயது குறைந்த நபர்களிடம் நிதானமாக செயல்பட வேண்டும் கூட்டு சேர்ந்து எந்த ஒரு புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது மாணவச் செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் கவலைகள் மனதில் உள்ள அழுத்தங்கள எல்லாம் விலகி நல்ல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்படும் இன்றைய நாளில் உங்களுடைய அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி கிடைக்கும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு வியாபாரிகளுக்கு புது வாடிக்கையாளர்கள் மூலமாக பொருளாதாரத்தில் சிறப்பு இருக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அதை போல் அரசாங்கம் வேலைக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும் மாணவ மாணவியர் படிப்பில் முன்னேற்றம் உண்டு எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உண்டாகும் யாரிடமும் விவாதம் செய்யக்கூடாது தேவையில்லாத விவாதம் பிரச்சனைகளை உண்டாக்கும் பொறுமையுடன் செயல்படும் போது தன்னம்பிக்கையுடன் செயல்படும்போது முன்னேற்றம் உறுதி பெண்களுக்கு இன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கப் போகிறது.

கடக ராசி நேயர்களே!

கடக ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பெண்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள் அதன் மூலமாக பல நன்மைகள் ஏற்படும் மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும் எதிலும் சிந்தித்து செயல்படுவது மூலமாக உங்களுக்கு வெற்றி உண்டு. அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு அரசாங்க வேலைக்கு முயற்சி எடுத்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது சகோதரர்களிடம் பொறுமையாக பேசவும் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும் பெண்களுக்கு தாய் வழி சொத்து மேலும் தாய் உறவுகள் மூலமாக நல்ல மாற்றங்கள் நல்ல முன்னேற்றங்கள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள் அக்கம் பக்கத்தில் மிகவும் உதவியாக இருப்பார்கள் உங்களை விட வயது குறைந்தவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலைகளும் பொருளாதார விஷயங்களில் நல்ல மாற்றமும் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே!

சிம்மம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மனதுக்குப் பிடித்தமான இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது பெண்களுக்கு கவலைகளை மறந்து பொருளாதார ரீதியான செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள் சித்தப்பா மூலமாக சிறப்பான செயல்பாடுகள் ஏற்படும் உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் மேலும் மன மகிழ்ச்சியில் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுக்கு அதிகநேரம் ஒதுக்குவீர்கள் குழந்தைகள் மூலமாக நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உருவாகும் உங்கள் குழந்தைகளின் திறமைகளை இன்று அவர்கள் நிரூபிக்க கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் மாணவ மாணவியர் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று மரியாதையும் பெறுவீர்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது வெளிநாட்டுக்கு முயற்சி எடுப்பவர்களுக்கு வெற்றி உண்டு வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு பொருளாதார சூழ்நிலையில் முன்னேற்றம் உண்டு.

கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு ராசிக்கு எட்டாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மறதிகள் அதிகமாகும் மன குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்பு உண்டு பொருளாதார விஷயங்களில் கவனமாக இருக்கணும் சில நேரங்களில் பிரச்சனையும் உண்டு புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது மாணவ மாணவியர் படிப்பில் அதிக அக்கறை செலுத்தினால் வெற்றி பெற முடியும் திடீர் அதிர்ஷ்டம் உண்டு பொருளாதார ரீதியான சூழ்நிலைகளில் நல்ல மாற்றம் உண்டு வழக்குகளில் வெற்றி.

துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் இன்று பயணம் செய்கிறார் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும் அதன் மூலமாக நன்மையும் ஏற்படும் பிரிந்தவர்கள் கூட ஒன்று சேருவீர்கள் குடும்பப் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் மாமனார் மாமியார் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள்விலை உயர்ந்த பொருட்களை வாங்க நேரிடும் தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் விலகும் மனதளவில் தெளிவான முடிவு எடுப்பீர்கள் நண்பர்கள் மூலமாக அதிகமான நன்மை ஏற்படும் அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் காதலர்களுக்கு இன்று மகிழ்ச்சிகளை அதிகம் கொடுக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சக ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் வீட்டில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் வேலை நிமித்தமான செயல்பாடுகளில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்த வேண்டும் நட்பு உறவுகளிடம் விட்டுக் கொடுக்கப் போவது நல்லது வண்டி வாகனங்களை கவனமாக செல்ல வேண்டும் பணம் கொடுக்கல் வாங்க விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ள கவலைகள் நீங்கும் பொருளாதார முன்னேற்றங்கள் முன்னேற்றத்தை கொடுக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு பெண்களுக்கு வயிறு வலி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் உங்களுடைய வேலை ஆட்கள் மிகவும் விசுவாசமாக உங்களுக்கு நடந்து கொள்வார் அதன் மூலமாக உங்களுடைய வேலை பளு குறையும்.

தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி அன்பர்களுக்கு 5 ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்வதினால் உங்களுடைய வாழ்க்கையில் இன்றைய நாளில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது மேலும் மனதளவில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் காதல் கை போடுவதற்கான வாய்ப்புகள் உண்டு காதல் செய்யாதவர்கள் காதலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியரிடம் பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு பணவரவுகள் நன்றாக இருக்கும்.. வியாபாரத்தில் வீண் விரயங்கள் குறையும் புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்திவீர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு இயல் இசை நாடகம் என அத்தனை விதமான கலைகளிலும் தேர்ச்சி பெறுவர் பொருளாதார ரீதியான முன்னேற்றங்கள் உண்டு.

மகர ராசி நேயர்களே!

மகர ராசி நேயர்களுக்கு ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் பொருளாதார ரீதியாக சூழ்நிலைகளில் முன்னேற்றம் உண்டு உங்களிடம் கடன் பெற்றவர்கள் அல்லது உங்களிடம் பணம் தருகிறேன் என்று கூறியவர்கள் உறுதியாக உங்களைத் தேடி வந்து கொடுப்பதற்கான சூழ்நிலை உருவாகும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்து மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவீர்கள் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் உண்டு அம்மாவை ரொம்ப நாளுக்காக சந்திக்கவில்லை என்றால் தற்போது சந்திக்க வாய்ப்புகள் ஏற்படும் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என வருத்தமும் கவலையும் இருந்தால் உறுதியாக இன்று நிறைவேற்றுவீர்கள் உங்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்க அதிக கவனம் செலுத்துவீர்கள் ஆரம்ப கல்வி படிக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் நல்ல மாணவ மாணவியர் என பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 3ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தைரியம் வீரியம் விடாமுயற்சி அதிகரிக்க கூடிய நாள் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்கல் துறையில் வேலை பார்க்கும் நேயர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு இன்று அதிகமாக உங்களுடைய புத்தி கூர்மையை திட்டுவீர்கள் சிந்தித்து செயல்படுவீர்கள் அதன் மூலமாக மிகப்பெரிய நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும் உங்களை விட வயது குறைந்தவர்களிடம் நீங்கள் அதிக அன்பு காட்டினால் அவர்கள் மூலமாக இங்கு மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க முடியும் அக்கம்பக்கத்தினர் உதவியாக இருப்பார்கள் வண்டி வாகனங்களை செல்லும்போது கொஞ்சம் கவனம் தேவை. உங்களுக்கு யாரேனும் பணம் தர வேண்டும் என்றால் அவர்கள் இன்று உங்களை தேடி வந்து கொடுப்பதற்கான வாய்ப்பு உண்டு கடன் பிரச்சனை முடிவுக்கு வரும் இன்று பத்திர பதிவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை செயல்படுத்தலாம்.

மீன ராசி நேயர்களே!

மீனம் ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார் பொருளாதார விஷயங்களை நல்ல முன்னேற்றம் உண்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் வீடு மனை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக முயற்சி எடுப்பீர்கள் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் காதலர்களுக்கு இன்று அற்புதமான நாள் தாய்மாமா உறவு உங்களை மகிழ்ச்சி படுத்தும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும் இன்று குலதெய்வ வழிபாடு பின்பற்றுவீர்கள் நட்பு மற்றும் உறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் மாணவ மாணவியருக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது.

Exit mobile version