ஸ்ரீ விசுவாவசு ஆவணி மாதம் 24 ஆம் தேதி
செப்டம்பர் 09, 2025 செவ்வாய்கிழமை.
நல்ல நேரம் : காலை 10:45 முதல் 11.45 வரை மாலை 04.45 முதல் 05.45 வரை
ராகு காலம் : மாலை 3 மணி முதல் 4.30 pm வரை
எமகண்டம் : காலை 09.00 முதல் 10:30 மணி வரை
குளிகை நேரம் : மதியம் 12 மணி முதல் 1:30 மணி வரை
மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசி நேயர்களே!

மேஷ ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சுப விரய செலவுகள் உண்டாகும் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது மூலமாக நன்மை ஏற்படும். சாலையோர வியாபாரிகள் மேலும் அலைந்து திரிந்து ஓரிடத்தில் இல்லாமல் மற்ற இடங்களில் சென்று வேலை பார்க்கும் நபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வாகனத்தில் உள்ள பழுதுகளை என்று சரி செய்வீர்கள் குழந்தைகளால் மதிப்பும் அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்கும் நிலுவையில் இருந்து வந்த பழைய சரக்கு விற்பனையாகும் உடன் இருப்பவரிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகமான கற்பனையான ஆற்றல்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்படும் அப்படிப்பட்ட சமயங்களில் மனதை ஒருநிலைப்படுத்துவது மூலமாக நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
- வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
ரிஷப ராசி நேயர்களே!

ரிஷப ராசி ராசிஅன்பர்களுக்கு ராசிக்கு 11ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தன வரவுகள் சிறப்பாக இருக்கும் வயது மூத்தவர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இரண்டாவது திருமணத்திற்கான வரன் அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களுக்கு தங்க நகைகள் மற்றும் தனக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்கள் வந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும் காதலர்களுக்கு இன்றைய நாளில் சிறப்பான நன்மைகள் உண்டு மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலையை அடைவார்கள் அப்பாவழி உறவுகள் மூலமாக புதிய திட்டம் நிறைவேறும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டு கடன் சுமைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய வண்டி வாகனங்கள் வாங்க புதியதாக கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் மூத்த சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு இளைய சகோதரர்களிடம் வீண் விவாதங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது கவனமாக பேச வேண்டும்.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மிதுன ராசி நேயர்களே!

மிதுன ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு பத்தாம் இடத்தில் பயணம் செய்கிறார் பொருளாதார ரீதியான முன்னேற்றம் உண்டு வேலையில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டு புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் எடுப்பீர்கள் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மற்றொரு தொழில் உருவாக்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சிறப்பாக நடைபெறும் மனதுக்கு பிடித்த வரன் அமையும் பெண்களுக்கு திறமைகள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவ மாணவிகள் படிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை அடைய முடியும் புதிய கடன் வாங்காமல் இருப்பது நல்லது கடன் சுமைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு உண்டு இளைய சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர் தோழிகள் உங்களுடைய வெற்றிக்கான முயற்சியில் உதவியாக இருப்பார்கள்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழிபட வேண்டிய தெய்வம் : பொன் இருளப்பசாமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கடக ராசி நேயர்களே!

கடக ராசி அன்பர்களுக்கு 9ஆம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்வதினால் உங்களுடைய வாழ்க்கையில் இன்றைய நாளில் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது மேலும் மனதளவில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும் காதல் கை போடுவதற்கான வாய்ப்புகள் உண்டு காதல் செய்யாதவர்கள் காதலில் மாட்டிக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு மாணவச் செல்வங்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியரிடம் பாராட்டு பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு பணவரவுகள் நன்றாக இருக்கும்.. வியாபாரத்தில் வீண் விரயங்கள் குறையும் புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்திவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : பெண் தெய்வ வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
சிம்ம ராசி நேயர்களே!

சிம்ம ராசி நேயர்களுக்கு ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் பயணம் செய்கிறார் இன்று எடுக்கின்ற ஒவ்வொரு முடிவுகளுமே சிறு குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம் நிதானமாக செயல்படுங்கள் நீங்கள் உங்களுடைய பணியை தவிர்த்து மற்ற விஷயங்களில் அதிகமாக தலையிட க்கூடாது இன்றைய நாள் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதினால் உங்களுடைய வீட்டின் அருகில் இருக்கும் நபர்கள் மூலமாக சிறு சிறு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது வீண் விவாதங்களை தொடர வேண்டாம் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கவனம் செலுத்த வேண்டும் வண்டி வாகனங்களை செல்லும் போது கவனம் செலுத்த வேண்டும் கணவன் மனைவிக்கி இடையே மூன்றாம் நபர்களின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் நீண்ட நாட்களாக முடிக்க நினைத்த பிரச்சனைகள் மாலைப் பொழுதிற்கு மேல் உங்களுக்கு சாதமாக முடிவு வரும் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது.
- அதிர்ஷ்ட எண் : 1
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழிபட வேண்டிய தெய்வம் : சூரிய பகவான் மற்றும் விநாயகர் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கன்னி ராசி நேயர்களே!

கன்னி ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் நண்பர்கள் மூலமாக ஆதாயம் உண்டு புதிய வாடிக்கையாளர்கள் மூலமாக நல்ல முன்னேற்றத்தை காண முடியும் மாணவ மாணவியர் படிப்பில் நல்ல முன்னேற்றமான நிலைக்கு வருவீர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் உறுதியாக வெற்றி உண்டு ரொம்ப நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் இன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய உறவுகள் புதிய நட்புகள் என்று உருவாவதற்கான சூழ்நிலைகள் உண்டு. வேலையில் முன்னேற்றம் உண்டு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு தங்க நகைகள் பொன் பொருள் சேர்க்கை ஈடுபடுவதற்கான சூழ்நிலை உருவாகும் பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் மாணவச் செல்வங்கள் படிப்பில் இன்று மிக அதிக அக்கறை காட்டி நல்ல மதிப்பெண் பெறுவது.
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
துலாம் ராசி நேயர்களே!

துலாம் ராசி அன்பர்களுக்கு ராசிக்கு ஆறாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்யும் காலம் இது இன்றைய நாளில் உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும் உங்களுடைய வேலையை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது உங்களுடைய வேலைகளை நீங்கள் மிக கவனமாக செய்ய வேண்டும் வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு புதிய கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இன்று உருவானால் அதற்கு நிதானமாக முடிவு எடுக்க வேண்டும் மேலும் மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு இன்றைய நாளில் எந்த ஒரு புதிய முயற்சியும் எடுக்கக் கூடாது.உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறு சிறு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும் உங்களுடைய தாய் மாமாவுக்கும் உங்களுக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு நிதானமாக பேசவும் அவர்களிடம் மாணவ செல்வங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் உறுதியாக வெற்றி பெறலாம் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வது மூலமாக வெற்றி பெற வாய்ப்புகளும் உள்ளது பொருளாதாரத்தில் முன்னேற்றங்கள் ஏற்படும் வீடு மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
- வழி பட வேண்டிய தெய்வம் : சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
விருச்சிக ராசி நேயர்களே!

விருச்சக ராசி நேயர்களுக்கு ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் மனதுக்குப் பிடித்த மாதிரி சந்தோஷமாக இருப்பீர்கள் பழைய நட்புகளை சந்திப்பீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு ஆதாயமும் உண்டு மகிழ்ச்சியும் உண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு கணவன் மனைவி ஒற்றுமை மிக இன்று மேலோங்கப்படும் உங்களுடைய குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டும் அளவுக்கு இருக்கும் புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் : ஊதா
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கும்.
தனுசு ராசி நேயர்களே!

தனுசு ராசி நேயர்களுக்கு சந்திர பகவான் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார் வண்டி& வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கலாம் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் அம்மாவழி உறவுகள் மூலமாக பொருளாதார ரீதியான முன்னேற்றங்களில் ஏற்படும் இன்று குலதெய்வ வழிபாடு பின்பற்றுவீர்கள்
தாய் மாமாஉறவுக்கும் உங்களுக்கும் இணக்கமான அன்பு ஏற்படும் அவர்கள் மூலமாக முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் இன்றைய நாளில் உங்களுடைய சந்தோசத்துக்கான செயல்பாடுகளில் அதிகம் மேற்கொள்வீர்கள் கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும் புதிய கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது அக்கம் பக்கத்தினரிடம் பேச்சுவார்த்தைகளில் கவனம் தேவை யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்கக் கூடாது.
- அதிர்ஷ்ட எண் : 2
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
- வழி பட வேண்டிய தெய்வம் : வீரபத்திரர் அம்மன் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
மகர ராசி நேயர்களே!

மகர ராசி நேயர்களுக்கு உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தில் சந்திர பகவான் பயணம் செய்கிறார் தைரியம் வீரியம் அதிகரிக்கும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும் வீட்டில் சுப காரியங்கள் செயல்பாடுகள் திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் இளைய சகோதரர்கள் மூலமாக முன்னேற்றம் உண்டு கம்ப்யூட்டர் மற்றும் கணிதம் சார்ந்த பிரிவுகளில் வேலை பார்க்கும் அன்பர்களுக்கு உயர்ந்த நிலையில் செல்வதற்கான வாய்ப்பு உண்டு வாகனங்கள் மூலமாக தன்னுடைய தொழில்களை செய்து வரும் நபர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஆடை ஆபரணங்களை வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகும் நண்பர்கள் ஆதரவு உண்டு தொழில்களில் உள்ள போட்டியை தகர்த்தெறிந்து வெற்றி பெறுவீர்கள்.
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
- வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.
கும்ப ராசி நேயர்களே!

கும்ப ராசி அன்பர்களுக்கு ராசிக்கு 12-ஆம் இடத்தில் சந்திரன் பகவான் பயணம் செய்கிறார் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளிலுமே சிறிது பதட்டம் உண்டு மறதிகள் மூலமாக பிரச்சனை ஏற்படும் விரைய செலவுகளை சுப செலவாக மாற்றிக் கொள்ளவும் புதிய அனுபவங்கள் கிடைக்கும் மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற அதிகமான முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் இடமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமாக பயணம் செய்ய வேண்டும் அரசு அரசு சார்ந்த விஷயங்களில் தலையிடும் போது நிதானமாக பேச வேண்டும் அரசுக்கு எதிராக எந்த ஒரு முயற்சி எடுக்கக் கூடாது.
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : நீலம்
- வழி பட வேண்டிய தெய்வம் : துர்க்கை வழிபாடு இந்த நாளை சிறப்பாக ஆக்கும்.
மீன ராசி நேயர்களே!

மீன ராசி அன்பர்களுக்கு சந்திர பகவான் ராசியில் பயணிக்கிறார் மனம் ஒருநிலைப்பட முடியாத அளவுக்கு சிந்தனைகள் அதிகமாக சிந்திக்க நேரிடும் ஒரு இடத்திலிருந்து வேலை பார்க்காமல் கொஞ்சம் வெளி சுற்றுவட்டால் நீ சென்று வேலை பணிகளை செய்யும்நபர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் மனதுக்கு பிடித்தவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது கடன் பிரச்சினை இருந்து விடுபடுவீர்கள் அக்கம் பக்கத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் மேலும் உங்களுடன் வேலை பார்க்கும் சக தோழர்கள் மற்றும் தோழிகள் மூலமாக ஒரு உயர்ந்த நிலையை அடைவீர்கள் இன்றைய நாள் உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிக நல்ல மதிப்பு கிடைத்து அடுத்த கட்ட உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு பெண்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும் இளைஞர்களுக்கு தனக்கு பிடித்தமான வேலையில் சேர்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும் அரசாங்க வேலையில் இருக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு.
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
- வழி பட வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்.