- மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளர்.
- பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 46 கி.மீ., தூர நெடுஞ்சாலையை சாலையை( என் எச் – 87) ரூ.1,853 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- ஒரே கூட்டணியில் பா.ம.க., – வி.சி., கட்சிகள் இருப்பது நல்லது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு வி.சி. மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
- போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் தி.மு.க.,வினர், டி.எஸ்.பி., பேரம் பேரம் பேச முற்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா? என தமிழக பா. ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
- டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான சக்தி வாய்ந்த இயந்திரமாக ஜி.எஸ்.டி., திகழ்கிறது”, என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேநேரத்தில் இந்த வரி மக்களுக்கு எதிரானது என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- இந்திய சிறைகளில், 463 பாகிஸ்தான் கைதிகளும் பாகிஸ்தான் சிறையில் 146 கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என மத்திய வெளியுறவுத்துறை ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- ராணுவ ஊழல் வழக்கு தொடர்பாக, ரஷ்யாவின் முன்னாள் பாதுகாப்பு துணை அமைச்சர் திமூர் இவனோவுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025
