- மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று மாலை 6:00 மணிக்கு எட்டியது. இதனையடுத்து, 58 அயிரம் கன அடி உபரி நீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது.
- முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தெலங்கானாவை அவரது குடும்பத்தின் ஏ.டி.எம். ஆக மாற்றினார். தற்போதைய காங்கிரஸ் அரசு, தெலங்கானாவை டில்லியில் உள்ள ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்.ஆக மாற்றியுள்ளது’ என்று தெலங்கானாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
- இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறலாம் எனக்கூறியுள்ள ஈரான் ஆயுதப்படை தளபதி, அப்படி நடந்தால் அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
- ஜம்மு காஷ்மீரின் பஹல்காமிற்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வர துவங்கி
- உள்ளனர். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும்
- தெரிவித்து உள்ளனர்.
- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போது, அ.தி.மு.கவை அழிக்க நினைத்த கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது. ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது,’ என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
- தாய்லாந்தில் இருந்து 5.119 கிலோ உயர் ரக கஞ்சா கடத்தி வந்த பயணியை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
- டில்லியில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து அடிக்கடி சர்ச்சை எழுகிறது. கிழக்கு டில்லியின் கரோல் பாக், லக்ஷ்மி நகர் மற்றும் சீலம்பர் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருந்தது தெரியவந்தது.
- பஞ்சாபில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் அடித்த வீரர், அடுத்த சில வினாடிகளில் மாரடைப்பால் இறந்தார். இந்த சோக சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
- பெங்களூருவில் மாநகராட்சி குப்பை லாரியில் கிடந்த பையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் அணு ஆயுத கட்டளை மையத்தை தாக்கி அழித்தோம். இது மிகப்பெரிய சாதனை என ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தியாகராஜன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் 30-06-2025
