- அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானத்தின் கருப்புப் பெட்டி, விசாரணைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டாது என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
- ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை நேற்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நிலைபெற்றது.
- மகாராஷ்டிரத்தில் ஓட்டுத் திருட்டு நடவடிக்கை நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.
- சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று (ஜூன் 24) சந்தித்தார்.
- இஸ்ரேல்- ஈரான் போர் நிறுத்த முயற்சிக்கு இந்தியா உதவ தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- என் நாற்காலியைப் பற்றி எனக்கு கவலை இல்லை. மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
- மத்திய கிழக்கு நாடுகள் வான்பரப்பை திறந்துள்ளதால், அந்த பகுதிகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான விமான சேவையை படிப்படியாக துவக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
- வரும் 2026 மார்ச்சிற்குள் இந்திய விமானப் படைக்கு 6 தேஜாஸ் ஜெட் விமானங்கள் கிடைக்கும் என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.கே.சுனில் கூறினார்.
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் உதவியுடன் நமது படைகள் எதிரிகளை 22 நிமிடங்களில் மண்டியிட வைத்தன. வரும் காலங்களில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில், சரியான நேரத்தில் வெளியிடப்படும் என என்.ஐ.ஏ., அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் 25-06-2025
